“வல்லரசா..? முதல்ல நல்லரசு அமையட்டும்” – மோடி அரசுக்கு விஜய் குட்டு

0
62
Vijay

வளர்ச்சி… வல்லரசு என்ற கோஷத்தை முன்வைத்து இயங்கிக் கொண்டிருக்கிறது மோடி அரசு. விவசாயிகளைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. நடிகைகளை சந்திக்கும் மோடி தலைநகரில் நாள்கணக்கில் போராட்டங்கள் நடத்திய விவசாயிகளை சந்திக்கவில்லை, அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்கவில்லை.

இதனை மறைமுகமாக சுட்டிக்காட்டிப் பேசினார் விஜய்.

தனியார் இணையதளம் நடத்திய விருது விழாவில் கலந்து கொண்ட விஜய் பேசும் போது, நாம் நன்றாக இருக்கிறோம். ஆனால், நமக்கு சோறு போடும் விவசாயிகள் நன்றாக இல்லை. உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகள் அரிசிக்காக ரேசன் கடையில் வரிசையில் நிற்கிறார்கள். விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வு காண்பது அவசியம் மட்டுமில்லை, அவசரமும்கூட. முதலில் விவசாயிகளுக்கான நல்லரசாக இந்தியா மாறட்டும். வல்லரசாக மாறுவதை பிறகுப் பார்த்துக் கொள்ளலாம் என்றார்.

கார்ப்பரேட்களின் கடன்களை தள்ளுபடி செய்யும் மோடி தலைமையிலான மத்திய அரசு விவசாயிகளின் கடன்களை தள்ளபடி செய்தால் நாட்டின் பொருளாதாரம் சரிந்துவிடும் என்கிறது. இந்த சந்தர்ப்பவாத பேச்சுகளையும், நடவடிக்கைகளையும் விஜய் போன்ற பிரபலங்கள் முன்னெடுத்தால் கடைகோடி மக்கள்வரை சென்று சேரும்.

இதையும் படியுங்கள் : வெறுப்பைப் பரப்புவது ஊடகத்தின் வேலையல்ல

இதையும் படியுங்கள் : பசி, போதை, பாரதி

இதையும் பாருங்கள் : சிறுநீரகத்தில் பிரச்சினையா, என்ன செய்ய வேண்டும் – டாக்டர் ராஜாமணி கூறுவதை கேளுங்கள்

இதையும் படியுங்கள் : நீட் தேர்வு முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் அனுமதி

இதையும் படியுங்கள் : விவசாயிகளையும் ஏழைகளையும் மோடி அரசு கைவிட்டது ஏன்?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்