வலுக்கும் சிவசேனா பாஜக மோதல் ; மக்களிடம் பொய் சொல்லும் பாஜகவுடன் இருக்க முடியாது -உத்தவ் தாக்கரே

0
262

5 ஆண்டுகள் ஆட்சிக் காலத்தில் சிவசேனா இரண்டரை ஆண்டுகள் ஆட்சியில் இருக்க வேண்டும் என்றும், பாஜக இரண்டரை ஆண்டுகள் ஆட்சியில் இருக்க வேண்டும்  என்று அமித் ஷா முன்னிலையில்  ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது என்று சிவசேனா தெரிவித்திருந்தது . இதனை முழுவதுமாக மறுத்திருக்கிறார் இன்று (நவம்பர் 8 ) தனது பதவியை ராஜினாமா செய்திருக்கும் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ். சிவசேனாவுக்கு இரண்டரை ஆண்டு கால ஆட்சி கொடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து பேச ஒன்றும் இல்லை. நான் இருக்கும் வரை அது நடக்காது என்று கூறினார் ஃபட்னாவிஸ். 

இதற்கு பதில் கொடுத்திருக்கிறார் சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே . அவர் கூறுகையில்  பாஜகவினர் நான் பொய் கூறுவதாக கூறுகிறார்கள். நான் பொய் சொல்லவில்லை. அவர்கள்தான் மக்களிடம் பொய் சொல்கிறார்கள். அமித் ஷாவும் தேவேந்திர பட்னாவிசும் என்னிடம் வந்தார்கள் நான் அவர்களிடம் போகவில்லை . பாஜக தலைவர் அமித் ஷா ஆட்சியில்  50;50 பார்முலாவை ஒத்துக் கொண்டார். இரண்டரை வருடம் சிவசேனாவைச் சேர்ந்தவர் முதல்வராகவும், இரண்டரை வருடம் பாஜகவை சேர்ந்தவர் முதல்வராகவும் இருக்க அவர் ஒத்துக் கொண்டார் என்றார். 

நான் அவர்களிடம் பேசபோவதில்லை. என்னை பொய்யர் என்று கூறியவர்களிடத்தில் நான் பேச போவதில்லை என்றும் கூறினார் உத்தவ் தாக்கரே.  

கூட்டணியுடம் இருக்க விரும்பினால் சீக்கிரமாக மகாராஷ்டிராவில் ஆட்சி அமையுங்கள். இல்லையென்றால் மற்ற கட்சிகளுக்கு ஆட்சி அமைக்க உரிமை இருக்கிறது. மேலும் பாஜக தங்களது கட்சி எம் எல் ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க பார்க்கிறது என்றும் குற்றம் சாட்டினார் உத்தவ் தாக்கரே. 

முதல்வர் பதவி சிவசேனாவுக்கு கிடைக்க வேண்டும் . வேறு எந்தத் தீர்வும் இல்லை என்றும் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். 

மகாராஷ்டிராவில்  புதிய ஆட்சியமைப்பதற்கான காலக்கெடு நவம்பர் 8 ஆம் தேதி  நள்ளிரவுடன் முடிவடையும் நிலையில், தற்போதைய முதல்வரான தேவந்திர ஃபட்னாவிஸ் , தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்துப் பல்வேறு விஷயங்கள் குறித்து அதிரடியாக பேசினார். 

மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த தேர்தலில் பாஜக – சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றாலும், அதிகாரப் பகிர்வில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. 

கடந்த 15 நாட்களில் சிவசேனாவின் அறிக்கைகள் மற்றும் கருத்துகள்  நாங்கள் எதையும் அவர்களிடத்தில் உறுதியளிக்கவில்லை. சிவசேனாவுக்கு இரண்டரை ஆண்டு கால ஆட்சி கொடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து பேச ஒன்றும் இல்லை. நான் இருக்கும் வரை அது நடக்காது என்று கூறினார் ஃபட்னாவிஸ். 

கடந்த அக்டோபர் 24 ஆம் தேதி, மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் வந்ததைத் தொடர்ந்து,  தேர்தலுக்கு முன்பு பேசியபடி அதிகாரத்தில் சரிபாதி பகிர்வை வலியுறுத்தியது  சிவசேனா. அதே நேரத்தில் பாஜக, சிவசேனாவுக்கு, துணை முதல்வர் பொறுப்பு, சில முக்கிய அமைச்சகங்களைத் தர முன் வந்தது. ஆனால், இது சிவசேனாவை சமாதானப்படுத்தவில்லை. 

உத்தவ் தாக்கரேவுடன் எனக்கு நெருக்கமான உறவு உள்ளது. அவருடன் தனிப்பட்ட முறையில் பேச நானே முயன்றேன். பலமுறை நான் அவருக்கு போன் அழைப்பு விடுத்தும், எதற்கும் பதில் இல்லை. ஆனால், அவர், தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியினருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்றும்  குற்றம் சாட்டியுள்ளார் ஃபட்னாவிஸ்.

மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் இருக்கும் 288 இடங்களில், பாஜக 105 தொகுதிகளைக் கைப்பற்றியது. சிவசேனா, 56 இடங்களைப் பிடித்தது.  தேசியவாத காங்கிரஸ், 54 தொகுதிகளில் வென்றுள்ளது. காங்கிரஸ் 44 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. 

 http://ndtv.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here