வலிமை படப்பிடிப்பில் அஜித்துக்கு என்ன நடந்தது?

0
68

நடிகர் அஜித்தின் 60-வது படமாக போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் வலிமை. இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், வலிமை படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் மீண்டும் தொடங்கியது. அதைத்தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன் ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம்சிட்டியில் மீண்டும் வலிமை படப்பிடிப்பு தொடங்கியது.

தற்போது ஐதராபாத்தில் அஜித் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. அஜித் இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிப்பதால் படத்தில் நிறைய ஆக்ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கார், பைக் ரேஸ்காட்சிகளும் இக்கின்றன.

ஐதராபாத்தில் நடைபெற்ற ஆக்ஷன் காட்சிக்கான படப்பிடிப்பின் போது அஜித்துக்கு லேசாக காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அவர் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்காக ஒரு நாள் ஓய்வு எடுத்துக்கொண்ட அஜித், மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு அதனை முடித்து விட்டு தற்போது சென்னை திரும்பி இருக்கிறார்.

அஜித்துக்கு காயம் ஏற்பட்டதை ரகசியமாக வைத்திருந்த படக்குழு படப்பிடிப்பு முடிந்த பின்னர் இத்தகவலை வெளியிட்டுள்ளது.

முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் வலிமை படத்தின் போது அஜித்திற்கு காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here