குளிர்காலம் நம்மை பெரும்பாலும் சளி மற்றும் இருமல் போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்திவிடும். குளிர் மற்றும் வறண்ட காற்றை சுவாசிப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து இதுபோன்ற தொந்தரவுகள் ஏற்படும். குறிப்பாக வறட்டு இருமல் சிலருக்கு தீராத வியாதியாக இருக்கும். மருந்து மாத்திரைகள் இன்றி இதனை தேன், இஞ்சி மற்றும் அதிமதுரம் போன்ற இயற்கை பொருட்கள் கொண்டு எளிதில் எப்படி குணப்படுத்துவது என்பது பற்றி தான் இந்த கட்டுரை.

எப்படி தயாரிப்பது?

மருத்துவ குணம் அடங்கிய தேன் மற்றும் இஞ்சி எல்லோர் சமையல் அறையிலும் இருக்கக்கூடிய ஒன்று. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். இஞ்சியில் ஆண்டிமைக்ரோபியல் தன்மை இருக்கிறது. ஒவ்வாமையை நீக்கும் தன்மை தேனிற்கு உண்டு. சளியை கரைக்க கூடிய தன்மை அதிமதுரத்திற்கு உண்டு. இவை மூன்றும் தொண்டைக்கு இதமளிக்கும். ஒரு மேஜைக்கரண்டி தேனில் சிறிதளவு இஞ்சி சாறு கலந்து சாப்பிடலாம். அல்லது அதிமதுரத்தை வாயில் அடங்கி வைத்து கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக அதன் சாற்றை முழுங்கி வரலாம். இவ்வாறு செய்யும் போது வறட்டு இருமல் மற்றும் தொண்டை கரகரப்பு சரியாகிவிடும்.

 

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்