நாட்டின் தொழில்நுட்ப சந்தையில் டிஜிட்டல் மயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தாக இருக்கும் என கூகுளின் தலைமை நிவாக அதிகாரி சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.

தற்போது கூகுளின் தலைமை நிவாக அதிகாரியாக பணிபுரியும் இந்தியாவைச் சேர்ந்த சுந்தர் பிச்சை, அவர் பயின்ற ஐஐடி காரக்பூருக்கு திடீர் விஜயம் செய்துள்ளார். அங்குள்ள மாணவர்களுடன் உரையாடியது மட்டுமல்லாமல் அவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார். அப்போது அவர், இந்தியாவில் சிறந்த பொறியியல் நிறுவனங்களில் ஐஐடி காரக்பூரும் ஒன்று என கூறினார். மேலும் அங்கு பயின்ற நாட்களில் நேரத்தை செலவிட்டதைப் பற்றியும் கூறினார். மாணவர்களுக்கு வெற்றியும், ஊக்கமும் முக்கியம் என்றும், இனி வரும் காலங்களில் நாட்டின் தொழில்நுட்ப சந்தையில் டிஜிட்டல் மயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் எனவும் கூறினார்.

இதையும் படியுங்கள் : சுந்தர் பிச்சை எதற்காக இந்தியா வந்திருக்கிறார்? (வீடியோவுடன்)

சுந்தர் பிச்சை 1993ஆம் ஆண்டு ஐஐடி காரக்பூரில் பிடெக் பயின்றுள்ளார். இதன் பின்னர் ஸ்டார்ன்போர்ட் பல்கலைகழகத்தில் எம்.எஸ் பயின்றார். கடந்த ஆண்டு கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்