உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியை கடந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது. சில நாடுகளில் தொற்றின் தாக்கம் குறையத் தொடங்கியிருந்தாலும், பல நாடுகளில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதிலும் கொரோனா தொற்று பரவத் தொடங்கி ஆறு மாதங்களை கடந்திருக்கும் நிலையில் ஏராளமான உயிர்கள் பலியாகி உள்ளது. ஆனால் தொற்றின் அதிகப்படியான தாக்கம் இனி வரும் காலங்களில் அதிகரிக்க இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

தற்போது சரியான நடவடிக்கைகளை அந்தந்த நாட்டின் அரசு செயல்படுத்த வில்லை என்றால் இன்னும் பலரை கொரோனா தொற்று தாக்கும் என்று எச்சரித்துள்ளார் உலக சுகாதார தலைவர். சீனாவில் கடந்த ஆண்டு தோன்றிய தோற்று காரணமாக 10 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது. அதில் பாதி அளவு பாதிப்பு அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்தி வரும் தொற்று தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்காவை ஆட்டிப் படைக்கின்றது. கொரோனா தொற்று முடிந்துவிட வேண்டும் என அனைவரும் நினைத்து வருகின்றோம். நமது பழைய வாழ்க்கை எப்போது திரும்பும் என்றே காத்திருக்கின்றோம். ஆனால் தொற்று முடிவதற்கான சூழல் இப்போது இல்லை என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் கூறியுள்ளார். இந்தியா, அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தும் தத்தளித்து வருகின்றது ஆனால் நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் திட்டவட்டமான நடவடிக்கைகளால் தொற்றிலிருந்து மீண்டு வருகின்றது என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here