வருமான வரி ஆய்வுக்கு நோட்டீஸ் வந்தால், நேரில் சென்று அதிகாரியைச் சந்திக்க வேண்டியதில்லை, இணையத்தளம் வாயிலாக பதிலளிக்க வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஆண்டு பட்ஜெட் உரையில் மின்னணு முறையில் வருமான வரி மதிப்பீட்டுத் திட்டத்தை அறிவித்தார். அதன்படி வரி செலுத்துவோர் வருமான வரி அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளைச் சந்திக்க வேண்டியதில்லை.

இணையத்தளத்தின் வழியாகவே வருமானம், விலக்கு, கழிவு ஆகியவற்றைத் தெரிவித்தால் மற்றொரு பகுதியில் உள்ள முகம் தெரியாத அதிகாரி அதைப் பரிசீலித்து வரியைக் கணக்கிடுவார். கடந்த ஆண்டு அக்டோபரில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தில் 58,319 பேர் இணையத்தளம் வழியாக மதிப்பீட்டைத் தாக்கல் செய்துள்ள நிலையில், அதில் 7,116 பேரின் அறிக்கைக்கு வரி மதிப்பீடு செய்து தீர்வு காணப்பட்டுள்ளது. முகமற்ற வரி மதிப்பீட்டின் மூலம் வருமான வரித்துறையின் முகம் மாறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் தற்போதைய மற்றும் சாத்தியமான வரி செலுத்துவோருக்கு ஒரு புதிய மின் பிரச்சாரத்தை நடத்தவுள்ளது. வரி செலுத்துவோரின் வசதிக்காக வருமான வரி தானாக முன்வந்து செலுத்துவதை இலக்காகக் கொண்டு புதிய பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். புதிய பிரச்சாரம் ஜூலை 20 முதல் தொடங்கி ஜூலை 31 ஆம் தேதியுடன் முடிவடையும் 11 நாட்களுக்கு தொடரும்.

மினிஸ்ட்ரி ஆஃப் ஃபைனான்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த புதிய பிரச்சாரம் 2018-19 நிதியாண்டிற்கான தாக்கல் செய்யாதவர்கள் அல்லது வருமானத்தில் முரண்பாடுகள் / குறைபாடுகள் உள்ள மதிப்பீட்டாளர்கள் / வரி செலுத்துவோர் மீது கவனம் செலுத்துகிறது. இ-பிரச்சாரத்தின் நோக்கம், வரி செலுத்துவோர் தங்கள் வரி / நிதி பரிவர்த்தனை தகவல்களை ஐ.டி துறையிடம், குறிப்பாக 2018-19 நிதியாண்டிற்கான மதிப்பீட்டாளர்களுக்கு சரிபார்க்கவும், தானாக முன்வந்து வரி செலுத்துவோரை ஊக்குவிக்கவும் உதவுவதேயாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here