வருமான வரி சோதனை நடத்தியதால் பாஜகவில் இணைந்தார்களா தெலுங்கு தேசம் எம்பிக்கள்? நற்சான்றிதழ் நிச்சயம் …

0
486

TDP MPs join BJP: Two MPs face CBI, ED, I-T probes, BJP had called them ‘Mallyas’

2018 ஆம் ஆண்டு நவம்பரில் பாஜக செய்தி தொடர்பாளர் ஜிவிஎல் நரசிம்ம ராவ் தெலுங்கு தேச எம்பிக்களான சி எம் ரமேஷ் மற்றும் ஒய் எஸ் சௌத்ரியையும் ஆந்திராவின் மல்லையாக்கள் என்று விமர்த்தார். ஆந்திராவின் மல்லையாக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி ராஜ்யசபாவின் நெறிமுறைகள் குழுவுக்கு கடிதம் எழுதினார். 

பாஜகவில் வியாழக்கிழமை இணைந்த 4 தெலுங்கு தேச கட்சியின் எம்பிக்களில் சி எம் ரமேஷ் மற்றும் ஒய் எஸ் சௌத்ரியும் அடங்குவர். இவர்கள் இருவரும் வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத் துறையின் கண்காணிப்பில் இருந்தவர்கள் . 


ரூ. 5, 700 கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கில், தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யான ஒய். எஸ். செளதரிக்கு தொடர்புடையதாகக் கூறி, அவருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி அவருக்கு சொந்தமான விலையுயர்ந்த 6 கார்களையும் அமலாக்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.


சென்னையில் அமைந்துள்ள பொறியியல் துறை சார்ந்த நிறுவனத்தில் நிதி முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். அந்த சோதனையின் போது, இந்த நிறுவனத்துடன் சேர்த்து சுஜானா குழும நிறுவனங்கள் அனைத்தும் எம்.பி. செளதரிக்கு சொந்தமானது என்று அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் தெரிவித்ததையடுத்து, சுஜானா குழுமத்துக்குச் சொந்தமான 8 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.


சென்னை பொறியியல் நிறுவன இயக்குநர்கள் கூறிய தகவல்களின் அடிப்படையில், சுஜானா குழுமத்துக்குச் சொந்தமான 8 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. சுஜானா குழுமத்துக்கு கீழ் சுமார் 120 நிறுவனங்கள் உள்ளதாக ஆவணங்களில் இருந்தது. அவற்றில் பல தற்போது செயல்பாட்டில் இல்லை. இந்த நிறுவனங்களின் இயக்குநர்கள் அனைவரும் எம்.பி. செளதரிக்கு பினாமியாக செயல்பட்டு வந்துள்ளனர். அதற்கான ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டன. அந்த இயக்குநர்கள் அனைவரும் வெறும் பெயர் அளவிலேயே செயல்பட்டு வந்துள்ளனர். எம்.பி.யின் உத்தரவுப்படியே நிறுவனங்களின் அனைத்து செயல்பாடுகளும் இருந்துள்ளன. இதற்கான தகவல் பரிமாற்றங்கள் மின்னஞ்சல் மூலமாக நடந்துள்ளது. இந்த சோதனையின் போது அந்த ஆவணங்கள் அனைத்தும் கைப்பற்றப்பட்டன. மேலும், சுஜானா குழுமத்தின் பல நிறுவனங்கள் இணைந்து ரூ. 5, 700 கோடி வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. செளதரிக்குச் சொந்தமான பென்ஸ், பெராரி,ரேஞ்ச் ரோவர் உள்பட 6 விலையுயர்ந்த கார்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. என்று  அமலாக்கத் துறை அதிகாரி ஒருவர் சோதனையின்போது கூறினார். 

மத்தியில் பாஜகவுடன், தெலுங்கு தேசம் கட்சி கூட்டணியில் இருந்த போது, செளதரி இணையமைச்சராக இருந்தார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுக்கு, செளதரி மிகவும் நெருக்கமானவர் .

தெலுங்கு தேசம் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் அந்த கட்சியின் எம்.பியுமான சி.எம். ரமேஷின்  சொந்த ஊரில் இருக்கும் வீடு மற்றும் ஹைதராபாத்தில் அமைத்துள்ள வீட்டிலும் சோதனை நடைபெற்றது.  இதனைத்  தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக குற்றம் சாட்டினார். ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு நாடாளுமன்றத்தில் கடுமையாக போராடி வருவதாக அவர் தெரிவித்தார். இதனால் அவரது வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக அவர் கூறினார்.  

தொழில் வளர்ச்சியைத் தடுக்க வேண்டும் என்ற மத்திய அரசின் சதி இந்த சோதனைகளின் பின்னணியில் உள்ளது எனவும்  அவர் கூறியிருந்தார்.  

இதனைத் தொடர்ந்துதான் நவம்பர் 28 ஆம் தேதி பாஜக செய்தி தொடர்பாளர் ஜிவிஎல் நரசிம்ம ராவ்  ஆந்திராவின் மல்லையாக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி ராஜ்யசபாவின் நெறிமுறைகள் குழுவுக்கு கடிதம் எழுதினேன் என்று டிவீட் செய்தார். 

சிபிஐயில் அலோக் வர்மாவுக்கும், ராகேஷ் அஸ்தானாவுக்கு நடந்த மோதலில் , சாட்சியாக இருந்த சனா சதிஷ் பாபு கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில்  தெலுங்கு தேசம் எம்பி ரமேஷ் வழக்கில் தலையிட்டதாக எழுந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து   அஸ்தானா லஞ்சம் கேட்டார் என்பதால் அலோக் வர்மா  ஊழல் வழக்கு தொடர்ந்தார். 

அஸ்தானா லஞ்சம் கேட்டார் என்று அலோக் வர்மாவிடம் குற்றச்சாட்டு வைப்பதற்குமுன் , அஸ்தானா குழுவிடம் அலோக் வர்மா லஞ்சம் கேட்டார் என்று குற்றச்சாட்டுக் கூறியிருந்தார் இந்த  சனா சதிஷ் பாபு. 

 பாஜகவை எதிர்த்தால் அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித்துறை எம் எல் ஏக்கள், எம்பிக்கள் வீட்டில், அலுவலகத்தில்  சோதனை நடத்தும். மீண்டும்  எதிர்த்தால் அவர்கள் மீது வழக்கு பாயும். அடங்கி போனால் பாஜகவில் சேர அறிவுறுத்தப்படும்.  பாஜகவில் சேர்ந்தால் சோதனையின்போது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் துடைக்கப்பட்டு நற்சான்றிதழ் அளிக்கப்படும். இதுதான் மோடியின் Sabka Saath, Sabka Vikas (development for all) Sabka Vishwas (trust of everyone)

indianexpress


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here