வருமான வரித்துறையின் சோதனையை தான் வரவெற்பதாக அதிமுக அம்மா அணி துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

டிடிவி தினகரன் மற்றும் அவரது உறவினர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்டவர்களுக்குச் சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர்ந்து மூன்றாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், வருமான வரித்துறையின் சோதனையை தான் எதிர்க்கவில்லையென்றும், அதனை வரவேற்பதாகவும் தெரிவித்தார். மேலும் அவர், தங்களைக் குறை கூறுபவர்கள் காந்தியின் பேரன், பேத்திகள் இல்லையென்றும் குறிப்பிட்டார்.

சோதனைக்குப் பயன்படுத்திய கார்கள் அனைத்தும் ஃபாஸ்ட் டிராக் நிறுவனத்திடமிருந்து வாடகைக்கு எடுக்கப்பட்டது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். ஃபாஸ்ட் டிராக் நிறுவனத்தின் உரிமையாளர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும், அரசியல் உள்நோக்கத்தில் சோதனை நடத்தப்படுகிறது என்றும் தெரிவித்தார். தனக்காக குரல்கொடுத்த அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்: ’ஜிஎஸ்டி எனக்கு புரியவில்லை’: பாஜக அமைச்சரின் பேச்சால் சர்ச்சை

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்