எனது மகன் நிறுவனத்தில் எந்த ஊழலும் நடைபெறவில்லை என பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்

பாரதிய ஜனதா கட்சி தேசியத் தலைவர் அமித் ஷாவின் மகனான ஜெய் அமித்பாய் ஷா, டெம்பிள் எண்டர்பிரைசஸ் பிரைவே லிமிடெட் என்னும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் இந்த நிறுவனத்தின் மார்ச் 2013 மற்றும் மார்ச் 2014ஆம் ஆண்டுகளில் அதன் ஆண்டறிக்கையில், முறையே 6,230 ரூபாய் மற்றும் 1,724 ரூபாய் இழப்பு இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து 2015-16ஆம் ஆண்டில் இந்நிறுவனத்தின் நிகர வருவாய் 80 கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. ஜெய் அமித்பாய் ஷாவின் வருவாய், அமித் ஷா பாரதிய ஜனதா கட்சியின் தலைவரான பிறகு 16,000 மடங்கு உயர்ந்துள்ளதாக ’தி வயர்’ நிறுவனம் செய்தி வெளியிட்டது. இந்த செய்தி வெளியானதை அடுத்து, காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் பாரதிய ஜனதா கட்சியைத் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.

amith

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா, “காங்கிரஸ் கட்சியினர் பல ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகின்றனர். தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்த்து அவர்கள் அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கிறார்களா?. அவர்களுக்கு ஏன் அந்தத் தைரியம் இல்லை. ஜெய் (அமித்ஷா மகன்), தன் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்த்து நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இப்போது நீங்கள் (எதிர்க்கட்சியினர்), நீதிமன்றத்திற்கு ஆதாரத்துடன் செல்லுங்கள்” என்றார்.

நன்றி: HIndustanTimes

இதையும் படியுங்கள்: பாலிவுட் மசாலா – மெர்சலை மோதி தகர்த்த பத்மாவதி

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்