யூடியூப் நிறுவனம் வருமானம் இல்லாத யூடியூப் சேனல்களை தங்களது தளத்தில் இருந்து நீக்க முடிவெடுத்திருப்பதாக  அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

யூடியூப்  உலக அளவில் விடியோ ஒளிபரப்பு தளங்களில் முதலிடத்தில் இருக்கிறது. நாள்தோறும் உலகம் முழுவதிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான விடியோக்கள் இத் தளத்தில் பதிவேற்றப்படுகின்றன. லட்சக்கணக்கான மக்கள் தங்களுக்கு என தனியாக சேனல் ஒன்றை உருவாக்கி, அதன்மூலம் வருமான ஈட்டுபவர்கள் இங்கு அதிக அதிக அளவில் உள்ளனர். யூடியூப் தளத்தில் உள்ள சேனல்கள் போதிய அளவு சம்பாதிக்கவில்லை என்றால் அத்தகைய சேனல்களை எல்லாம் நீக்கப்போவதாக யூடியூப் புதிய விதிமுறையை வடிவமைத்து வருகிறது.

வணிக ரீதியாக வெற்றி பெறாத யூடியூப் சேனல்களை மட்டுமல்லாது அவை பதிவிட்ட அத்தனை வீடியோக்களும் யூட்யூப் தளத்திலிருந்து நீக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இது உலக அளவில் பல யூடியூப் பயனர்களின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.

சின்ன, வளர்ந்து வரும் யூடியூப் பயனர்களைப் பலியாக்கி, பெரும் சேனல்களை மட்டும் மீண்டும் வளர்க்க யூடியூப் உதவுகிறது என சர்வதேச அளவில் பலரும் யூடியூப் தளத்தின் மீது சமூக வலைதளங்களில் இது தொடர்பாக புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்த ஆண்டுக்குள்ளாகவே இந்த நடைமுறை அமல்படுத்தப்படும் என யூடியூப் சேனல்கள் மெயில் மூலமாகத் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறதாம். யூடியூப் தளம் இப்புதிய விதியை வருகிற டிசம்பர் 10ஆம் தேதி முதலே செயல்படுத்தத் தொடங்கும் எனக் கூறப்படுது.

ஆனால் இந்தச் செய்தியில்கடுகளவும் உண்மையில்லை என்று யூடியூப் நிறுவனம் மறுத்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here