வருமானம் இல்லாததால் ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை; குடும்பத்தினருக்கு 25 கிலோ அரிசி, கோதுமை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

After news of the auto driver's death reached the authorities Patna District Magistrate Kumar Ravi rushed to the family's home with 25 kg of rice and wheat

0
227

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கால் பொது போக்குவரத்து முடங்கியது. தனது குடும்பத்தை காப்பாற்ற போதிய வருமானம் இல்லாத, ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தற்கொலை செய்துகொண்ட 25 வயது இளைஞர், தினக்கூலியாக எங்கும் வேலை கிடைக்காத காரணத்தில்   லோனில் ஆட்டோ வாங்கி ஓட்டி வந்துள்ளார். இதனிடையே, 3 மாதம் ஊரடங்கால் கடன் தவணையைக் கட்ட முடியவில்லை. 

இதுகுறித்து அந்த இளைஞரின் தந்தை கூறும்போது, எங்களது ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் ரேஷன் கார்டு கிடையாது. எங்கெங்கோ அலைந்து பார்த்தும் ரேஷன் கார்டை பெற முடியவில்லை. 

ஆனால் என் மகன் இறந்த  செய்தி அதிகாரிகளுக்கு தெரிய வந்ததும், பாட்னா மாவட்ட ஆட்சியர் எங்களுக்கு  25 கிலோ அரிசி மற்றும் கோதுமையை வழங்கி சென்றார். அந்த இளைஞருக்கு 3 குழந்தைகளும் உள்ளன. 

இந்த விவகாரம் குறித்து எதிர்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் முதல்வர் நிதிஷ் குமாரை கடுமையாக விமர்சித்துள்ளார். வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட உண்மையான பிரச்சினையில் கவனம் செலுத்தவில்லை என்று விமர்சித்துள்ளார். 

மேலும், நிதிஷ் குமாரும், பாஜகவும் களத்தில் உள்ள வேலையில்லா திண்டாட்டம் போன்ற பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும். இதுவே பீகாருக்கு உதவும், இந்த விவகாரம் உடனடியாக கவனிக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

இந்திய பொருளாதாரத்தை கண்காணிப்பு மையத்தின் படி, மே.2020இல் பீகாரில் வேலையின்மை விகிதமானது 46.2 விகிதமாக உள்ளது. 

உலகில் மிகக் கடுமையாகவும், நீண்ட நாட்களாகவும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் இருந்து, பொருளாதாரத்தை மீட்க போராடி வரும் நிலையில், லட்சக்கணக்கானோர் வேலையிழந்து வருகின்றனர். பலர் உயிர் வாழ்வதற்கே போராடி வருகின்றனர். இந்த சூழலில் பீகார் உள்ளிட்ட மாநில அரசுகள் சமநிலையான வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் கொரோனாவை எதிர்கொள்வது உள்ளிட்ட சிக்கல்களை எதிர்கொண்டுள்ளன. 

கடந்த மாதம் தொழிலதிபர்கள் பீகார் மாநிலத்தில் தொழிற்சாலைகளை அமைத்து, ஏற்கனவே அங்கு இருக்கும் லட்சக்கணக்கான வேலையற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்றும், ஊரடங்கால் வீடு திரும்பிய லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டனர்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here