ராஜஸ்தான் மாநிலத்தின் சட்டசபைத் தேர்தல், இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கிறது . இந்நிலையில் ராஜஸ்தானில் பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை 4 சதவீதமாக குறைந்து ராஜஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் முதல் பெட்ரோல், டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினசரி அடிப்படையில் நிர்ணயம் செய்துகொள்ளும் முறை அமலுக்கு வந்தது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வைச் சந்தித்து வருவதால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்து வருகிறது . இதனால் பொதுமக்கள் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

இந்நிலையில், பெட்ரோல், டீசலுக்கான மதிப்புக் கூட்டு வரியை 4 சதவீதம் குறைப்பதாகவும், இது மாநில மக்களுக்கும் விவசாயிகளுக்கும் தேவையான நிவாரணம் இருக்கும் என்று பொதுக் கூட்டம் ஒன்றில் முதல்வர் வசுந்தரா ராஜே தெரிவித்தார்.

இதையடுத்து பெட்ரோல் மீதான மதிப்புக் கூட்டு வரி 30 சதவீதத்தில் இருந்து 26 சதவீதமாகவும், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரி 22 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 குறைய என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் அரசின் இந்த அறிவிப்பால் அரசிற்கு ரூ.2 ஆயிரம் கோடி கூடுதலாக செலவாகும் என கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சி அறிவித்த நாடு தழுவிய போராட்டம் பொதுமக்கள் ஆதரவை பெற்ற பின்னரே, பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரி குறைக்கப்பட்டுள்ளதாக மூத்த காங்கிரஸ் காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது .
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் மற்றும் முழு அடைப்புப் போராட்டத்தை காங்கிரஸ் கட்சியின் தலைமையில் எதிர்க்கட்சிகள் இணைந்து போரட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

(இந்தச் செய்தி பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here