வருகிறது இந்தியாவின் முதல் மாற்றுப் பாலினத்தவர்களுக்கான மாடலிங் நிறுவனம்

0
551

டெல்லியில் மாற்றுப்பாலினத்தவர்களுக்கான முதல் விளம்பர மாடல் நிறுவனம் தொடங்கப்பட இருக்கிறது. அதற்கான வேலைகளை டெல்லியில் உள்ள மாற்றுப்பாலினத்தவர் ஆர்வலரான ருத்ரானி சேத்ரி கவனித்து வருகிறார். மித்ர் என்கிர அறக்கட்டளை மூலமாக அவர் இந்த ஐடியாவை செயல்படுத்த உள்ளார். புகைப்பட கலைஞரான ரிஷி ராஜ் என்பவரும் இந்த திட்டத்திற்கு உதவியாக உள்ளார். மாற்றுப்பாலினத்தவர்களுக்கு உள்ள மன நெருக்கடியில் இருந்து அவர்கள் மீள்வதற்காகவே இந்த மாடலிங் நிறுவனத்தை ஆரமிக்க இருப்பதாக ருத்ரானி சேத்ரி கூறியுள்ளார்.
”பல மாற்றுப்பாலினத்தவர்கள் தங்களுடைய இளம் வயதில் அழகாக இருந்தாலும் அசிங்கமாக இருக்கிறோம் என மனகுமுறலில் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களை இனம்கண்டு மாடல் அழகிகளாக மாற்றுவதுதான் இந்த நிறுவனத்தின் குறிக்கோள். பிரபல புகைப்பட கலைஞர் ரிஷிராஜ் பிரபல ஃபேஷன் பத்திரிக்கை உதவியின் மூலமாக இதற்காக மாடல்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார். ”, என ருத்ரானி கூறுகிறார்.
இதற்காக மித்ர் (MITR) அறக்கட்டளை இந்திய-பிரிட்டிஷ் திரை இயக்குனர்களுடன் ஒரு வருடமாக இணைந்து பணியாற்றி வருகிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்