வரிப்பணத்தை எடுத்து பெரும்தொழிலதிபர்களின் கடன் ரூ5.5 லட்சம் கோடியை தள்ளுபடி செய்த மோடி அரசு; ஆர்பிஐ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

0
278

மக்களின்  வரிப்பணத்தை எடுத்து பெரும் தொழிலதிபர்களின் வாராக்கடன்களை மோடி தலைமையிலான மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது. ஏப்ரல் 2018 முதல் டிசம்பர் 2018 வரையில் , அதாவது 9 மாதக் காலங்களில் ரூ1,56,702 கோடி (1 லட்சத்து 56 ஆயிரத்து 702 கோடி ) வாராக்கடனை தள்ளுபடி செய்திருக்கிறது மோடி தலைமையிலான அரசு . கடந்த 10 வருடங்களில் ரூ 7,00,000 கோடி (ரூ 7 லட்சம் கோடி ) வாராக்கடனை தள்ளுபடி செய்திருக்கிறது மன்மோகன் சிங் அரசும் , மோடி அரசும். இந்தப் புள்ளி விவரங்களை ஆர்பிஐ வெளியிட்டிருக்கிறது.  

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதள் வாராக்கடன் தள்ளுபடி குறித்து ஆர்பிஐக்கு எழுதிய மனுவில் விளக்கம் கேட்டிருந்தது. இந்த ரூ7 லட்சம் கோடியில் 80 சதவீத வாரக்கடன்கள் மோடி தலைமையிலான ஆட்சியில் தள்ளுபடி செய்யப்பட்டவை  அதாவது ஏப்ரல் 2014 முதல் டிசம்பர் 2018 வரையில் மோடி அரசு ரூ 5,55,603 கோடி (ரூ5 லட்சத்து 55 ஆயிரத்து 603 கோடி ) வாராக்கடனை தள்ளுபடி செய்திருக்கிறது என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது. 

2016 – 2017 நிதி ஆண்டில் ரூ1,08,374 கோடிகள், 2017 – 2018 நிதி ஆண்டில் ரூ1,61,328 கோடி, 2018 -2019 நிதி ஆண்டில் (அதாவது 2018 ஏப்ரல் முதல் 2018 செப்டம்பர் வரையில் ) ரூ82,799 கோடி, 2018 அக்டோபர் முதல் 2018 டிசம்பர் வரையில் ரூ64,000 கோடி – பெரும் தொழிலதிபர்களின் வாராக்கடன்களை தள்ளுபடி செய்திருக்கிறது மோடி அரசு.

இந்த வாரக்கடன் தள்ளுபடி பெற்ற பெரும்தொழிலதிபர்களின் விவரங்கள் சரிவர தெரிவதில்லை என்று வங்கி தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் வாராக்கடன்களை திரும்ப பெற வங்கிகள் நடவடிக்கை எடுத்துவருவதாக வங்கிகள் கூறினாலும் , வாங்கியகடனில் 15% முதல் 20% வரை மட்டுமே திரும்ப வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   

  சட்டப்பூர்வ தணிக்கையாளர்களின் அனுமதி பெற்றப் பிறகே இந்த வாராக்கடன் தள்ளுபடிகள் செல்லும். 

https://indianexpress.com/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here