உத்தரப்பிரதேசத்தில், தேசிய புலானய்வுத் துறையினர் மற்றும் அம்மாநில காவல்துறையினர் நடத்திய சோதனையில், 100 கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், புதிதாக கட்டப்பட்டு வந்த வீட்டின் அறை முழுக்க மதிப்பிழந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து தேசிய புலனாய்வுத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர், கான்பூரின் ஸ்வரூப் நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து மாநில போலீசாருடன் இணைந்து சோதனை நடத்தியதாகத் தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் மாதம், டெல்லியில் தேசிய புலனாய்வுத்துறையினர் 36.34 கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகளைப் பறிமுதல் செய்திருந்தனர்.

நன்றி: hindustantimes

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்