அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு கடுமையான சரிவைக் கண்டுள்ளது. சர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 70.52 ஆக சரிந்துள்ளது. சர்வதேச சந்தையில் இந்தியாவைச் சேர்ந்த இறக்குமதியாளர்களுக்கு அமெரிக்க டாலரின் தேவை அதிகரித்ததால் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக பற்றாக்குறை உயர்ந்ததும் ரூபாய் மதிப்பு குறையக் காரணமாகக் கூறப்படுகிறது. வர்த்தக பற்றாக்குறை 5 ஆண்டுகளில் இல்லாத அளவு 18 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.

மேலும் அமெரிக்கா மெக்சிக்கோ வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக இருப்பதால் உயர்வு ஏற்பட்டுள்ளது.

டாலருக்கான தேவை அதிகரித்ததால் இந்திய ரூபாய்க்கான மதிப்பு குறைந்துள்ளது. இறக்குமதியாளர்கள்,எண்ணெய் சுத்தீகரிப்பாளர்களுக்கான டாலர் தேவை அதிகரித்ததால் இந்திய ரூபாய் மதிப்பில் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

(இச் செய்தி பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்