வயதான தாய், தந்தையை கவனிக்காவிட்டால் சிறை; பீகார் அமைச்சரவையில் அதிரடி

0
220


பீகாரில் வயதான தாய், தந்தையை கவனிக்காவிட்டால் சிறைதண்டனை வழங்கும் சட்ட மசோதாவுக்கு பீகார் அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

வயதான பெற்றோர்களை ஒழுங்காக பார்த்துக்கொள்ளாமல் கைவிடும் அவர்களது மகன், மகள்களுக்கு சிறை தண்டனை வழங்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. பீகார் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான சட்ட முன்வரைவுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 

இந்த சட்டத்தின் மூலம் பெற்றோர்களை பார்த்துக்கொள்ளாத மகன், மகள்கள் குறித்து பெற்றோர்களிடம் இருந்து புகார்கள் வந்தால், அவர்களது பிள்ளைகள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here