வன்புணர்வு செய்த பெண்ணை ஜாமீனில் வெளியே வந்து எரித்த குற்றவாளிகள்; 1 கிமீக்கும் மேலாக தீயுடனே உதவிக் கேட்டு ஓடிய பெண்

0
1089

 உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் நகரைச் சேர்ந்த அந்த இளம்பெண்ணை 2 பேர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாலியல் வன்கொடுமை செய்தனர். 

இதைத் தொடர்ந்து அந்த  பெண் தன்னை 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் ஒன்றை பதிவு செய்தார் . அந்தக் குற்றவாளிகளில் ஒருவர் தலைமறைவாகிவிட்டார். கைதான மற்றொருவர் 10 நாள்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்தார்.   ஜாமீனில் வெளியே வந்தவர், தலைமறைவாகி இருந்தவர் மற்றும்  3 நண்பர்களுடன் இணைந்து வன்புணர்வு செய்யப்பட்ட பெண் நீதிமன்றத்துக்கு போகும் வழியில் அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளனர். 

தற்போது குற்றவாளிகள் 5 பேரையும் கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் துறைக்கு அளித்த வாக்குமூலத்தில், ”கடந்த ஓராண்டுக்கு முன்பு என்னை வன்புணர்வு செய்த இரண்டு பேரும்  தங்களது நண்பர்கள் மூவருடன் இணைந்து என் மீது தீ வைத்தனர்” என்று கூறியுள்ளார். 

லக்னோ சிவில் மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி டிஎஸ் நேகி கூறுகையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 90% காயம் ஏற்பட்டுள்ளது. அதிக வலியால் துடித்துக் கொண்டுள்ளார். அவரால் வலியை தாங்க முடியவில்லை. அடுத்த 48 முதல் 72 மணி நேரம் வரை ஆபாத்தான கட்டத்தில்தான் இருப்பார். தற்போது அதிர்ச்சியில் இருக்கிறார் என்றார்.

தீயுடனே எங்களை நோக்கி அந்தப் பெண் ஓடி வந்தார் எங்களுக்கு பயமாக இருந்தது நாங்கள் அவரை பார்த்த போது ஒரு கிலோ மீட்டருக்கும் மேலாக ஓடி வந்திருக்கிறார். நாங்கள் 100க்கு டையல் செய்த போது அவர்தான் போலீசுடன் பேசினார் என்று பார்த்தவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து காவல் துறை டிஜிபி ஓபி சிங்க் கூறுகையில், ”மிகவும் துரதிருஷ்டவசமான சம்பவம். ஹரி சங்கர் திவேதி, சிவம், சுபம் திரிவேதி உள்பட ஐந்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்றத்தின் உத்தரவின்படி இந்த வழக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராபரேலிக்கு மாற்றப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை பதிவு செய்து இருக்கிறோம். காவல் துறை நடவடிக்கைகளை மாவட்டக் கலெக்டர் மற்றும் எஸ்பி கண்காணித்து வருகின்றனர்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here