வன்புணர்வாளர்கள் பூமிக்கு பாரம் என்றும் வாழத் தகுதியற்றவர்கள் என்றும் மத்திய பிரதேச முதலமைச்சர் ஷிவ்ராஜ் சிங்
சௌஹான் கூறியுள்ளார்.

மண்டாசூர் பகுதியில் எட்டு வயது சிறுமியை ஒருவன் பள்ளிக்கூடத்திற்கு வெளியே கடத்தி வன்புணர்வு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

”இந்த மிருகங்கள் பூமிக்கு பாரமாக உள்ளனர். அவர்கள் வாழத் தகுதியற்றவர்கள் ,” என்று பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

“வன்புணர்வு குறித்து விரைவு நீதிமன்றங்களில் விசாரிக்க வழி செய்யப்பட்டுள்ளது. உயர் நீதி மன்றம் மற்றும் உச்ச நீதி மன்றத்திலும் இதே போன்ற ஏற்பாடைச் செய்து குற்றவாளிகளுக்கு உடனடியாக மரண தண்டனையை நிறைவேற்ற வலியுறுத்தப்படும்,” என்றார்.

12 வயதிற்குட்பட்ட பெண்களை வன்புணர்வு செய்தால் மரண தண்டனை விதிக்க மத்திய பிரதேச சட்டமன்றத்தில் சென்ற ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது.

மண்டாசூர் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த சௌஹான், “அது ஒரு துயரச் சம்பவம். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நாங்கள் ஆதரவாக உள்ளோம். அப்பெண்ணின் நிலை குறித்து கண்காணித்து வருகிறோம். அவளது உடல்நலம் முன்னேறி வருகிறது. மருத்துவர்களோடு நான் தொடர்பில் உள்ளேன்.”

”குற்றவாளி ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளான். அவனுக்கு எதிராக ஆதாரம் உள்ளது. விரைவு நீதி மன்றம் மூலம் விரைவாக அவனுக்கு மரண தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார் முதல்வர்.

செவ்வாய்க்கிழமை மாலை வீட்டிற்கு அழைத்து செல்ல தனது உறவினர்களுக்காக அச்சிறுமி பள்ளியின் வெளியே காத்திருந்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது. குற்றவாளிகளான இர்ஃபான் என்கிற பையூ (20 வயது), ஆஷிஃப் (24 வயது) அவளைக் கடத்தி பேருந்து நிறுத்த பகுதிக்கு ஆழைத்து சென்று லக்‌ஷ்மன் தர்வாஜா பகுதியில் புதர்களுக்கிடையே வன்புணர்வு செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அவளது கழுத்தை அறுத்து கொலை செய்யவும் முயற்சித்துள்ளான். குற்றவாளிகள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here