இந்தியாவின் அதிகவேக ரயிலான வந்தே பாரத் எக்ஸ்ப்ரஸ் எஞ்ஜின் கோளாறு காரணமாக டெல்லிக்கு செல்லும் வழியில் பாதியிலேயே செயலிழந்தது. அதி பயணித்த பயணிகள், இருவேறு ரயில்களில் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

புது டெல்லி ரயில் நிலையத்தில் இதற்கான துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தியாவின் ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ அதிவேக ரயிலை பிரதமர் நரேந்திர மோடி நேற்று(வெள்ளிக்கிழமை) கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

நேற்று வாரணாசியில் இருந்து டெல்லிக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, டெல்லியில் இருந்து சரியாக 150 கிலோ மீட்டர் தூரத்தில் ரயில் எஞ்ஜினில் கோளாறு ஏற்பட்டு பாதியிலேயே ரயில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து பயணிகள் வேறு ரயில்கள் மூலம் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் கோளாறு சரி செய்யப்பட்டு ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ மீண்டும் நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல் வழக்கமான சேவையை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியிலிருந்து வாரணாசிக்கு, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், 9 மணி நேரம் 45 நமிடத்தில் சென்றடையும். நடுவே கான்பூர் மற்றும் அலகாபாத்தில் 40 நிமிடங்களுக்கு இந்த ரயில் நிற்கும். இந்த ரயிலில் 16 குளிர்சாதனப் பெட்டிகள் இருக்கின்றன. 1,128 பேர் இதில் பயணிக்க முடியும்.

ஆன்லைன் மூலமாக மட்டுமே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு டிக்கெட் புக் செய்ய முடியும். சாதாரண ரயில் பெட்டி டிக்கெட்டின் விலை, 1760 ரூபாய். உயர் ரக டிக்கெட்டின் விலை 3,310 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here