சுந்தர் சி. இயக்கத்தில் எஸ்டிஆர் நடித்திருக்கும் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை பிரபல தொலைக்காட்சி வாங்கியுள்ளது.

தெலுங்கில் த்ரிவிக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம், அத்தரின்டிகி தாரேதி. இதன் தமிழ் ரீமேக்கை வாங்கிய லைகா நிறுவனம் அதனை வந்தா ராஜாவாதான் வருவேன் என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளது. சுந்தர் சி. இயக்க, எஸ்டிஆர், மேகா ஆகாஷ் நடித்துள்ளனர். பிப்ரவரி 3 ஆம் தேதி படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் டிவி வாங்கியுள்ளது. சர்கார், பேட்ட, விஸ்வாசம் படங்களைத் தொடர்ந்து வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் ஒளிபரப்பு உரிமையும் சன் டிவிவசம் சென்றுள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்