ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோமார்ட் எனும் புதிய ஆன்லைன் வர்த்தக சேவையினை இந்தியாவில் ஆரம்பித்துள்ளது. 

இந்தியாவில் அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு போட்டியாக புதிய ஜியோமார்ட் சேவை அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக இந்த சேவை மும்பை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மட்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

ஜியோ சந்தாதாரர்களுக்கு ரிலையன்ஸ் ரீடெயில் சார்பில் ஜியோமார்ட் பற்றிய தகவல்கள் அனுப்பப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. முதற்கட்டமாக மும்பையில் துவங்கப்பட்டுள்ள ஜியோமார்ட் சேவை படிப்படியாக மற்ற பகுதிகளிலும் விரிவுப்படுத்த ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது.

தர்போது வலைத்தளம் மற்றும் ஜியோமார்ட் செயலியை உருவாக்கும் பணிகளில் ரிலையன்ஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

புதிய ஜியோமார்ட் சேவையின் மூலம் வாடிக்கையாளர்கள் சுமார் 50,000-க்கும் அதிகமான மளிகை பொருட்களை வாங்க முடியும். மேலும் பொருட்களை வாடிக்கையாளர்களின் வீட்டிற்கு இலவசமாக டெலிவரி செய்யப்படுகிறது.

புதிய ஆன்லைன் வர்த்தக சேவையின் மூலம் ஆஃப்லைன் – டு – ஆன்லைன் திட்டத்தில் செயல்பட இருக்கிறது. இதில் வியாபாரிகள், உற்பத்தியாளர்கள், சிறு வணிகர்கள் மற்றும் பிராண்டுகளை தொழில்நுட்ப உதவியுடன் நேரடியாக வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ள வைக்க ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது.

இதுதவிர ரிலையன்ஸ் நிறுவனம் ஆன்லைன் – டு – ஆஃப்லைன் சந்தையை உள்ளூர் வணிகர்களுக்காக உருவாக்கி வருகிறது.

இதன் மூலம் சீனாவில் அலிபாபா போன்று ரிலையன்ஸ் ஜியோமார்ட் சேவையை இந்தியாவில் ரிலையன்ஸ் பிரபலப்படுத்தும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here