இளையராஜாவின் பாடல்களுக்கு ராயல்ட்டி கொடுத்து பயன்படுத்துமாறு மட்டுமே கேட்டுக் கொண்டுள்ளதாக இளையராஜா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், தனது திரையுலக பயணத்தைத் துவங்கி 50 ஆண்டுகள் ஆகின்றன. இவர் இசையமைப்பாளர் இளையராஜா இசையில் பல பாடல்களைப் பாடியுள்ளார். தற்போது உலகம் முழுவதும் பல நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களை மேடை நிகழ்ச்சிகளில் பாடக்கூடாது என்று எஸ்.பி.பி., பாடகி சித்ரா உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதையும் படியுங்கள் : ”முடியாதவர்களுக்கு மாதம் 12,000 ரூபாய் வங்கியில் போட்டுவிடுங்கள்”

இதனையடுத்து இளையராஜாவின் நடவடிக்கை குறித்து பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். பெரும்பாலானோர் எஸ்.பி.பிக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

இதையும் படியுங்கள் : 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள் ஆன்-லைனிலும் கிடைக்கும்

இந்நிலையில் இளையராஜா சார்பில் அவரது காப்புரிமை ஆலோசகர் பிரதீப்குமார் விளக்கம் அளித்துள்ளார். அவர் , “எஸ்.பி.பிக்கு நோட்டீஸ் அனுப்பியதை மக்கள் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். நோட்டீஸ் அனுப்புவது வழக்கமான நடவடிக்கைதான். இளையராஜாவின் பாடல்களைப் பாடவேண்டாம் என கூறவில்லை. உரிய அனுமதி பெற்று ராயல்ட்டி கொடுத்து பயன்படுத்திக்கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது அவ்வளவுதான்” என்று கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள் : சபரிமலை ஐயப்பன் கோயிலின் பெயர் மாற்றம்

மேலும் , சாதாரணமாக மேடை நிகழ்ச்சிகள் செய்பவர்களிடம் இருந்து ராயல்ட்டி எதுவும் எதிர்பார்க்கவில்லை என்றும், ஆனால் வணிக நோக்கத்துடன் பாடல்களைப் பாடுவோர் அதற்குரிய கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள் : இந்திய ரூபாய் மதிப்பு சரிவு; சென்செக்ஸ் 244 புள்ளிகள் உயர்வு

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்