சென்றவாரம் வெளியான படங்களில் வடசென்னையும், சண்டக்கோழி 2 படமும் வசூலில் போட்டியிடுகின்றன. சென்னை மாநகரில் சண்டக்கோழி 2 வை வீழ்த்தி முதலிடத்தைப் பிடித்துள்ளது வடசென்னை. தமிழக அளவில்…?

வடசென்னை புதன்கிழமை வெளியானது. போட்டிக்கு படங்கள் இல்லாதது, சிறப்புக் காட்சிகள் திரையிட்டது என முதல்நாளில் தமிழகத்தில் 6.40 கோடிகளை வசூலித்தது. இரண்டாவது நாளில் (வியாழன்) சண்டக்கோழி 2 வெளியாக, வடசென்னை திரையரங்குகளை, காட்சிகளை இழந்தது. வசூல் 4.76 கோடிகளாக குறைந்தது. வெள்ளி, சனி, ஞாயிறில் சிறிது பிக்கப்பாகி ஐந்து நாள் முடிவில் தமிழகத்தில் சுமார் 28 கோடிகளை வசூலித்தது. இது கிராஸ் கலெக்ஷன். இதில் வரிகள் போக வருவதே நெட் கலெக்ஷன். அது 20 கோடிகளுக்குள் வரும்.

சண்டக்கோழி 2 சுமார் என்றாலும் பூஜை விடுமுறை தினத்தில் குடும்பமாக திரையரங்குக்கு செல்ல நினைத்தவர்களுக்கு சண்டக்கோழி 2 ஒரே சாய்ஸாக இருந்ததால் (வடசென்னைக்கு ஏ சான்றிதழ், குழந்தைகள் அனுமதியில்லை) கூட்டம் குறைவில்லாமல் இருந்தது. முதல் நான்கு தினங்களில் படம் தமிழக அளவில் 16.5 கோடிகளை வசூலித்தது. வரிகள் போனால் கிடைப்பது சொற்பமே.

வடசென்னை, சண்டக்கோழி 2 இரண்டில் தமிழக அளவில் அதிக ஓபனிங் வடசென்னைக்கே. எனினும், இரண்டு படங்களின் வசூலும் பிரமாதமில்லை என்பது வருத்தமான செய்தி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here