வடசென்னை படத்தை பாராட்டுகிறவர்கள், படம் சிறப்பாக இருக்கு, ஆனா… என்று ஒரு ஆனாவை வைக்க தவறவில்லை. அந்த ஆனா என்னவென்றால், படத்தில் தீர்க்கமற நிறைந்திருக்கும் கெட்டவார்த்தைகள். வசனங்கள், கதாபாத்திரங்கள் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்று கெட்டவார்த்தைகளை அப்படியே வைத்திருக்கலாம். எனினும், கொஞ்சம் அதிகமோ என திகைக்க வைக்கின்றன இந்த வசவுச் சொற்கள். முக்கியமாக ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும் கெட்டவார்த்தைகள் ரசிகனுக்கு அதிர்ச்சியளிப்பதை சொல்லியாக வேண்டும்.

வடசென்னை பெண்கள் அனைவரும் இப்படியா கெட்டவார்த்தை பேசுகிறார்கள்? இது உண்மையல்ல என்று வடசென்னையைச் சேர்ந்த இளைஞர்கள் பலரும் ஆதங்கப்பட்டு பேசிய வீடியோக்கள் இணையத்தில் வலம்வருகின்றன. இந்நிலையில், வடசென்னையில் வரும் இந்த வசவுச் சொற்களை குறிப்பிட்டு பாராட்டியிருக்கிறார் இயக்குநர் கௌதம்.

வெற்றிமாறன் என்னுடைய சிரம்தாழ்ந்த வணக்கத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று வெற்றிமாறனை பாராட்டியிருக்கும் கௌதம், ஆண்ட்ரியா, தனுஷ் ஆகியோரையும் குறிப்பிட்டு பாராட்டியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் பற்றி குறிப்பிடுகையில், வசவுச் சொற்கள் பேசும் இளம்பெண் கதாபாத்திரத்தில் நம்மை ஈர்த்து விடுகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். தன் மனதில் இருப்பதைப் பேசும், ஆண்களுக்கு வசவுச் சொற்களிலேயே பதில் சொல்லும் ஒரு பெண்ணைப் பார்ப்பது நன்றாக இருக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைவரும் விமர்சிக்கும் ஒன்றை பாராட்டாக முன்வைத்துள்ளார் கௌதம்.

தனது படங்களில் சென்னையின் மூன்றெழுத்து கெட்டவார்த்தையை சகஜமாகவும், ஆற்றெnழுக்காகவும் பயன்படுத்துகிறவர் கௌதம் என்பது நினைவுகூரத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here