வடகொரியாவில் யாருக்கும் கொரோனா பரவவில்லை: உண்மைத்தன்மை குறித்து தென்கொரியா கேள்வி?

Pyongyang closed its borders in January to try to protect itself from the disease and regularly said it had no cases, but state media had shied away from such explicit statements in recent months, instead stressing the importance of prevention efforts.

0
171

வடகொரியாவின் ஆளும் தொழிலாளர் கட்சியின் 75 வது ஆண்டு விழா நேற்று(சனிக்கிழமை) நடைபெற்றது. இதை கொண்டாடும் வகையில் அந்நாட்டின் தலைநகரில் ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் பேசிய அந்நாட்டு அதிபர் கிம்ஜங் உன்,  கொரோனா வைரஸின் பாதிப்புக்கு ஒருவர் கூட பாதிக்கப்படாமல் நல்ல உடல் ஆரோக்கியமுடன் மக்கள் இருப்பதற்காக அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

உலகம் முழுவதற்கும் பெரும் தீங்கு ஏற்படுத்தி வரும் இந்த தொற்றுநோயில் இருந்து மக்கள் அனைவரையும் நாம் காப்பாற்றியிருக்கிறோம் என்ற உண்மையானது நம்முடைய இயற்கையான பணி, இது நம்முடைய கட்சிக்கு கிடைத்த வெற்றியாகும். இந்த வெற்றியை தொடர்ந்து மக்களின் ஆரோக்கிய தோற்றத்தினை காணும்பொழுது, நன்றி தெரிவிப்பதை தவிர வேறு வார்த்தைகள் எதுவும் என்னிடம் இல்லை என்று கிம் ஜங் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து வடகொரிய மக்கள் அவர்களாகவே மிக பெரிய வெற்றியை சாதித்து இருக்கிறார்கள். வடகொரியாவின் அண்டை நாடான சீனாவில் வுஹான் நகரில் கண்டறியப்பட்டு பின்னர் பல நாடுகளிலும் தீவிர பாதிப்புகளுக்கு மக்கள் ஆளாகிவரும் சூழலில், எங்கள் நாட்டில் கொரோனா பாதிப்புகள் இல்லை என வடகொரியா கூறி வந்தது கவனத்தில் கொள்ள கூடியது.

வடகொரியாவில் யாருக்கும் கொரோனா பரவவில்லை என கிம் தெரிவித்து வரும் நிலையில் இந்த தகவலின் உண்மைத்தன்மை மிகுந்த கேள்விக் குறியானது என தென்கொரியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here