வஞ்சிரம் மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இருக்கிறது. தவிர நல்லவகை கொழுப்புகளும் அதிகம். இவையாவும் இதயத்துக்கு பலம் சேர்க்கக்கூடியது.  இது, உயர் ரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதயத் துடிப்பைச் சீராக்கும். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மீன் உணவு சாப்பிட வேண்டியது அவசியம். ஏனெனில், இதில் இருக்கும் டி.ஹெச்.ஏ (Docosahexaenoic acid) எனும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு நன்மை தரக்கூடியது.

சுவையான  வஞ்சிரம் மீன் வறுவல் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

தேவையானவைமீன் துண்டுகள் – 10, எலுமிச்சை – 1, இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் துாள் – 1 டீ ஸ்பூன், மிளகு துாள் தேவைக்கு, குழம்பு மசாலா- தேவையான அளவு, மிளகாய் துாள் காரத்திற்கு ஏற்ப, உப்பு- தேவையான அளவு.

செய்முறை: சுத்தம் செய்த மீன் துண்டுகளை, எலுமிச்சை சாறு பிழிந்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து தனியே வைக்கவும்.

இஞ்சி, பூண்டு விழுதுடன் மஞ்சள் துாள், மசாலா தூள், மிளகு துாள், மிளகாய் துாள், உப்பு சேர்த்து பாதி எலுமிச்சை சாறு பிழிந்து, அதனுடன் கொஞ்சமாக நீர், நல்லெண்ணெய் சேர்த்து, கெட்டியாக பிசைந்த மசாலா கலவையை மீன் துண்டுகளில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், நல்லெண்ணெய் தடவி, மீன் துண்டுகளை இரண்டு பக்கமும், சிவக்க வறுத்து எடுக்கவும். வறுத்த கறிவேப்பிலை, எலுமிச்சை சாறு பிழிந்து சாப்பிட வஞ்சிர மீன் வறுவல் அசத்தலாக இருக்கும்!!

(குறிப்பு: அடுப்பை மிதமான தீயில் வைத்து சமைத்தால், மீன் கருகாமல் சுவையுடன் இருக்கும்.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here