ராஜஸ்தானில் முஸ்லிம் பெயர் கொண்ட 3 கிராமங்களுக்கு இந்து பெயர் சூட்டியது வசுந்தரா ராஜே அரசு.

ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் உள்ள மியான் க பாரா கிராமத்தின் பெயர் தற்போது மகேஷ் நகர் என்று மாற்றப்பட்டுள்ளது . ஜலூர் மாவட்டத்தில் இருக்கும் நர்படா கிரமாத்தின் பெயர் தற்போது நர்புரா என்று மாற்றப்பட்டுள்ளது. ஜுன்ஜுன்ஜு மாவட்டத்தில் இருக்கும் இஸ்மாயில்புர் தற்போது பிச்சான்வா குர்த் என்றும் மாற்றப்பட்டுள்ளது என்று அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பெயர் மாற்றம் மத்திய அரசின் அனுமதி வாங்கிய பிறகே நிகழ்ந்துள்ளது .

உத்தரபிரதேசத்தில் மொகல்சராய் ரயில் நிலையத்துக்கு தீன் தயாள் உபாத்யே என்று மாற்றப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் வேளையில் ராஜஸ்தானில் இந்த பெயர் மாற்ற நிகழ்வு நடந்துள்ளது .

இந்த பெயர் மாற்றம் தொடர்பான திட்டத்தை வசுந்தரா அரசு உள்துறை அமைச்சகத்திடம் முன்வைத்தது . இதற்கு குறிப்பிட தகுந்த காரணங்கள் எதையும் வசுந்தரா அரசு முன்வைக்கவில்லை. சட்ட பேரவை நட்க்க சில் மாதங்களே உள்ள நிலையில் அரசு இந்த பெயர் மாற்ற நிகழ்வை நடத்தியிருக்கிறது. இது குறித்து அங்கு வாழும் மக்களும் , அதிகாரிகளும் வெவ்வேறு விதமாக பேசிக் கொள்கின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் எதிர்க்கட்சிகள் மக்களை பிளவு படுத்தும் பாஜகவின் திட்டமே என்று கூறியுள்ளது.

ராஜஸ்தான் மாநில சட்டப் பேரவைத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற்றவுள்ளது. இந்த சூழ்நிலையில், இந்த பெயர் மாற்ற நடவடிக்கை பெரும்பான்மை வாக்காளர்களை கவரவே இந்த திட்டம் என்றும் கூறப்படுகிரது. . இது தொடர்பாக மாநில அரசு அளித்துள்ள விளக்கத்தில், மியோன் கா பாரா (முஸ்லிம்களின் இல்லம்) கிராமத்தில் 2,000 பேர் வசிக்கின்றனர். ஆனால், அங்கு 4 முஸ்லிம் குடும்பங்களே வசித்து வருகின்றன. மேலும், இந்த கிராமங்கள் முஸ்லிம் பெயர்களை ஒட்டி அமைந்துள்ளதால், முஸ்லிம் ஆதிக்கம் உள்ள இடம் என்று தவறாகக் கருதி இளைஞர்களுக்கு பெண் கொடுக்க மறுத்து வருகிறார்கள். இது தொடர்பாக பல புகார்கள் வந்தன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ராஜஸ்தானில் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையிலான அரசு மக்களை முக்கியப் பிரச்னைகளில் இருந்து திசை திருப்புவதற்காக இதுபோன்ற மதப் பிரச்னைகளை கையில் எடுத்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் பார்மர் மாவட்ட பாஜக எம் எல் ஏ ஹமீர்சிங் பாயல், மியான் கா பாரா கிராமத்தின் பெயரை மாற்ற 10 ஆண்டுகளுக்கு முன்பே கோரிக்கை வைக்கப்பட்டது. இங்கிருக்கும் கடவுள் சிவனின் சிலையால்தான் தற்போது மகேஷ் நகர் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. அந்த காலத்தில் இந்த கிராமத்தின் பெயர் மகேஷ் நகர் என்பதே அது மருவி மியான் கா பாரா என்று ஆகிவிட்டது என்று கூறியுள்ளார்.

உள்துறை அமைச்சகம் மக்களவையில் மார்ச் மாதம் பல்வேறு மாநிலங்களிலிருந்து பல்வேறு கிராமங்கள், டவுன்கள் , ரயில் நிலையங்களின் பெயர்களை மாற்ற கூறி 27 கோரிக்கைகள வந்தது என்று கூறியது .

Courtesy : The Indian Express

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here