இந்திய வங்கிகள் ஏழை, எளியவர்களைப் புறந்தள்ளி வசதியானவர்களிடம் வழிகின்றன என்பது நாம் அறிந்ததே; இதுவரை 8.41 லட்சம் கோடி ரூபாயை இந்திய வங்கிகள் பெரும் பணம் படைத்தவர்களிடம் இழந்துள்ளன; இதைப் பற்றி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய 10 உண்மைகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன. சென்னையின் கனிஷ்க் நிறுவனத்தின் உரிமையாளர்கள் பூபேஷ் குமார் ஜெயினும் அவரது மனைவி நீதாவும் 824.15 கோடி ரூபாய் வங்கிகளிடம் ஏய்ப்பு செய்த தகவல்தான் இதுவரை சென்னையில் பெரும் தொகையாக இருக்கிறது. பட்டியலிலுள்ள மற்றவர்களின் இருப்பிடங்கள் பெங்களூரிலிருந்து கொல்கத்தா வரை நீள்கின்றன.
1.விஜய் மல்லையா, கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ்: 9,500 கோடி ரூபாய்; வங்கிகள்: யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க்
2.நீரவ் மோடி, டயமன்டெய்ர்: 13,000 கோடி ரூபாய்
3.ஜதின் மேத்தா, வின்ஸம் குழுமம்: 6,712 கோடி ரூபாய்
4.நிதின் கஸ்லிவால், எஸ்.குமார்ஸ் நேஷன்வைட்: 5,000 கோடி ரூபாய்
5.சந்தீப் ஜுன்ஜுன்வாலா, ஆர்இஐ அக்ரோ, கொல்கத்தா: 3,871 கோடி ரூபாய்
6.விக்ரம் கோத்தாரி, ரோட்டோமாக் குளோபல், கான்பூர்: 3,695 கோடி ரூபாய் வங்கி: பேங்க் ஆஃப் பரோடா
7.விஜய் சவுதரி, ஜூம் டெவலப்பர்ஸ்: 2,650 கோடி ரூபாய்
8.பி. கே. திவாரி அன்ட் ஃபேமிலி, மஹுவா மீடியா மற்றும் பிற கம்பெனிகள்: 2,416 கோடி ரூபாய்
9.2012இல் ஐசிஐசிஐ வங்கி, வீடியோகான் தலைவர் வேணுகோபால் தூத்துக்கு 3250 கோடி ரூபாய் கடன் வழங்கியது; இதற்கு ஆறு மாதங்களுக்குப் பின்னர் ஐசிஐசிஐ தலைவி சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாரின் நியூபவர் நிறுவனத்துக்கு தூத் கோடிக்கணக்கில் நிதியளித்துள்ளதற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.
10.ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 27,716 கோடி ரூபாயை வசதி படைத்தவர்களிடம் இழந்து முதலிடம் பெற்றுள்ளது.
Help people #OvercomeOckhi