வங்கி மோசடி; 3 மாதத்தில் 2,480 வழக்குகள்;ரூ.32000 கோடி ஊழல்: அதிர்ச்சி தரும் ஆர்டிஐ தகவல்; பாஜக ஆட்சியில்தான்

0
349

நாடு முழுவதும் 2,480 வங்கி மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக ஆர்டிஐ ஆர்வலர் சந்திரசேகர் கௌட் கூறுகையில்,

நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை பதிவு செய்யப்பட்ட வங்கி மோசடி வழக்குகள் மற்றும் அதனால் வங்கிகளில் ஏற்பட்ட இழப்பு அல்லது ஊழல் தொகையின் அளவு உள்ளிட்டவை தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் ரிசர்வ் வங்கிக்கு கேள்வி எழுப்பியிருந்தேன்.

இதுதொடர்பாக ஆர்பிஐ அளித்த பதிலில், குறிப்பிட்ட காலகட்டத்தில் மட்டும் 18 பொதுத்துறை வங்கிகளில் இருந்து 2,480 வங்கி மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ரூ.31,898.63 கோடி இதனால் இழப்பு அல்லது ஊழல் நடைபெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக பாரத ஸ்டேட் வங்கியில் 1,197 மோசடி வழக்குகளும் (ரூ12012.77 கோடி),  அலகாபாத் வங்கியில் 381 மோசடி வழக்குகளும்- (ரூ2855.46 கோடி), பஞ்சாப் நேஷனல் வங்கியில் 99 மோசடி வழக்குகளும்-(ரூ2526.55 கோடி) பதிவாகியுள்ளன. ஆனால், இவ்வங்கிகளில் மட்டும் இதனால் ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து தங்களிடம் போதிய தகவல் இல்லை என ஆர்பிஐ தெரிவித்துவிட்டதாக கூறினார். 

பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் 75 மோசடி வழக்குகளும் (ரூ2297.05 கோடி), ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் வங்கியில் 45 மோசடி வழக்குகளும் (ரூ2133.08 கோடி) , கனரா வங்கியில் 69 மோசடி வழக்குகளும் (ரூ 2035.81 கோடி), சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 194 மோசடி வழக்குகளும் (ரூ 1982.27 கோடி), யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 31 மோசடி வழக்குகளும் (ரூ1196.19 கோடி) பதிவாகியுள்ளன. 

கார்பரேஷன்  வங்கியில் 16 மோசடி வழக்குகளும் (ரூ960.80 கோடி), இந்தியன் ஓவர்சீஸ்  வங்கியில் 46 மோசடி வழக்குகளும் (ரூ934.67 கோடி) , சிண்டிகேட்  வங்கியில் 54 மோசடி வழக்குகளும் (ரூ 795.75 கோடி), யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 51 மோசடி வழக்குகளும் (ரூ 753.37 கோடி), பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 42 மோசடி வழக்குகளும் (ரூ517 கோடி) , UCO வங்கியில் 34 மோசடி வழக்குகளும் (ரூ470.74 கோடி) பதிவாகியுள்ளன. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here