வங்கி, தபால் நிலையங்கள் மூலம் சிஏஏ, என்ஆர்சி.,க்கு கணக்கெடுப்பு: மம்தா எச்சரிக்கை

West Bengal Chief Minister warned banks and post offices against doing surveys, implying that they were gathering data for the contentious NRC.

0
177

மேற்கு வங்க மாநிலத்தில், குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) ஆகியவற்றுக்காக வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களின் மூலம் கணக்கெடுப்பு நடப்பதாகவும், அதற்காக யாரும் தகவல்களை அளிக்க வேண்டாம் என முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.


மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சிஏஏ, என்ஆர்சி மற்றும் என்பிஆர் உள்ளிட்டவற்றை மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம் எனக்கூறி இவற்றிற்கு எதிராக சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றினார். மத்திய அரசு சார்பில் சிஏஏ, என்ஆர்சி.,க்காக உங்களின் ஆவணங்களை கேட்டால் யாரும் கொடுக்க வேண்டாம் எனவும் மாநில மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில், மத்திய அரசு மறைமுகமாக கணக்கெடுப்பு நடத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக மம்தா கூறியபோது, பாஜகவின் பெயரைச் சொல்லாமல் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் மூலமாக வீடுகளுக்கு வந்து கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அரசின் அனுமதி இல்லாமல் நடத்தப்படும் இந்த கணக்கெடுப்புகளுக்கு யாரும் தங்களின் விபரங்களை அளிக்க வேண்டாம். தற்போது, டிவி செய்தியில் பார்த்தபோது ஹப்ராவில் உள்ள நகைக்கடையில் பாஜகவை சேர்ந்த15 பேர், சிஏஏ மற்றும் என்ஆர்சி தொடர்பான ஆவணங்களை காட்ட வேண்டும் என கூறுகின்றனர்.

அவர்களுக்கு அதிகாரம் வழங்கியது யார்?.அப்படி கேட்பவர்களை விரட்டுங்கள். அவர்கள் அரசாங்கத்திடம் இருந்து வருவதாக கூறினால் நம்பாதீர்கள். இவ்வாறு மம்தா கூறினார்.

இந்நிலையில், நகைக்கடையில் ஆவணங்களை கேட்ட நபர்கள் மீது ஹப்ரா காவல்துறையினர் எப்.ஐ.ஆர்.,பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here