வங்கி கணக்கு இல்லாத மாணவர்கள் பி.இ படிப்புக்கு எப்படி விண்ணப்பிக்க முடியும்? – உயர்நீதிமன்றம்

0
138

வங்கி கணக்கு இல்லாத மாணவர்கள் பி.இ படிப்புக்கு எப்படி விண்ணப்பிக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க வேறு வழி இருக்கிறதா? கட்டணத்தை ரொக்கமாகவோ, வரைவோலை மூலமாகவோ செலுத்தி விண்ணப்பிக்க முடியுமா என்பது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற நடைமுறையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், பொன்.பாண்டியன், முரளி ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது.

அப்போது அண்ணா பல்கலை கழகம் சார்பில் கிராமப்புற மாணவர்கள் பயன் பெறும் வகையில் தமிழகம் முழுவதும் 42 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஆன் லைன் கலந்தாய்விற்கு மாணவர்கள் செல்போன் மூலமாக கூட
விண்ணபிக்கலாம் என்பதால், ஆன்லைன் முறையால் கிராமப்புற மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டது.

ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் போது விண்ணப்பத்திற்கான கட்டணத்தை டெபிட் கார்டு,கிரேடிட் கார்டு, நெட் பேங்கிங் மூலமாக மட்டுமே செலுத்தமுடியும் என்பதால் இது ஏற்புடையதல்ல என்று மனுதாரர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் கிராம புறத்தை சேர்ந்த பலர் வங்கி கணக்கு இல்லாமல் இருக்கும் நிலையில், அத்தகைய மாணவர்களின்
பெற்றோர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டை பயன்படுத்தி விண்ணப்ப தொகையை எவ்வாறு செலுத்த முடியும் என கேள்வி
எழுப்பினர். மேலும் இதற்கு மாற்று நடவடிக்கையாக விண்ணப்ப தொகையை நேரடியாக ரொக்கமாகவோ அல்லது
வரைவோலையாகவோ செலுத்த அனுமதிக்க முடியுமா என்றும் நீதிபதிகள் கேட்டனர்

மேலும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது விண்ணப்ப படிவங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளதால், தமிழ் மட்டுமே
தெரிந்த கிராமப்புற மாணவர்கள் பொறியியல் படிப்பை படிக்க முடியாதா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இது தொடர்பாக நாளை (மே10ஆம் தேதி ) அண்ணா பல்கலைக்கழகம் பதில் அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படியுங்கள்: “பாஸ்வேர்டை மாற்றுங்கள்” – பயனர்களுக்கு டிவிட்டர் எச்சரிக்கை

இதையும் படியுங்கள்: #BanSterlite: “மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை மூடிட்டுப் போக வேண்டியதுதானே”

இதையும் படியுங்கள்: மக்களின் வரிப்பணம் 198 கோடி ரூபாய் வீண்; 580 கேள்விகளில் 17 கேள்விகளுக்கு மட்டுமே பதில்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்