வங்கியில் வேலை செய்யும் ஊழியர்களைத் திருமணம் செய்ய தடை விதித்து தேவ்பந்த் மதரஸா ஃப்த்வா பிறப்பித்துள்ளது. இதனைத் திரும்பப் பெற வேண்டும் என முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் செயல்பட்டு வரும் தாருல் உலூம் தேவ்பந்த் எனும் இஸ்லாமிய கல்வி நிறுவனமானது, வட்டி தொழிலில் ஈடுபடுபவர்கள், வட்டியுடன் தொடர்புடைய இடங்களில் பணிபுரிபவர்களின் குடும்பங்களுடன் திருமண உறவு வைத்துக்கொள்ள வேண்டாம் என ஃபத்வா பிறப்பித்துள்ளது. இதனைத் திரும்பப் பெற வேண்டும் என அனைத்திந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஹாலித் ரஷீத் ஃபிரங்கி மகாலி
ஹாலித் ரஷீத் ஃபிரங்கி மகாலி

இது குறித்து பேசியுள்ள அதன் செயல்தலைவர் ஹாலித் ரஷீத் ஃபிரங்கி மகாலி, “முஸ்லிம்களில் அதிகமானோர் வங்கிகளில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த ஃப்த்வா மிகவும் தவறானது. இந்த ஃப்த்வாவைப் பிறப்பித்தவர்கள் இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.

மஜ்லிஸ் இத்தஹத்-இ-மில்லத்தின் பொதுச்செயலாளர் உஸ்மானி, “தாருல் உலூம் தேவ்பந்த் மதரஸா பிறப்பித்துள்ள இந்த ஃப்த்வா மிகவும் சரியானது. வட்டியை இஸ்லாம் தடை செய்துள்ளது.” என்றார்.

இதையும் படியுங்கள்: பெற்றோர்களின் சண்டையால் மன உளைச்சலுக்கு ஆளானவரா நீங்கள்? இதைப் பாருங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here