வங்கிகளில் கடன் பெற்றுவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பியோடுவதைத் தடுக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய யோசனையை வழங்கியுள்ளது.

வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்லும் நடவடிக்கைகள் அதிகரித்திருக்கும் நிலையில் இது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று தனது கருத்தை முன் வைத்துள்ளது.

பகுதி நேர பணியாளர், அரசிடம் அனுமதி பெறாமல் வெளிநாட்டுக்குச் சென்று வந்தது தொடர்பான வழக்கு விசாரணையின் போது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, வங்கிக் கடன் தொடர்பான தனது கருத்தை முன் வைத்தார்.
வங்கிகளிம் கடன் பெறுவார் பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்கும் வகையில் விதிகளை திருத்த மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை செய்துள்ளது.

கடனை திரும்ப செலுத்தும் வரை பாஸ்போர்ட்டை திருப்பிக் கொடுக்க இயலாது என்றும், குறித்த காலத்தில் கடனை செலுத்தாவிடில் பாஸ்போர்ட்டை தற்காலிகமாக ரத்து செய்யவும் விதிமுறைகளில்  மாற்றம் கொண்டு வரலாம் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் நிலையூர் பகுதி அங்கண்வாடி பகுதி நேர ஊழியர் மங்கலம், அரசின் அனுமதி பெறாமல் வெளிநாடு சென்று வந்ததற்காக பணிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பகுதி நேர ஊழியராக இருந்தாலும் அர்ப்பணிப்பு மனப்பான்மை இருக்க வேண்டும் என்று கூறினார்.


courtesy: DN

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here