மாற்றுத்திறனாளிகளை மதிக்காத வங்கிகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளைச் செய்யாமல் தட்டிக் கழிக்கிறார்கள்

0
283

சென்னை தியாகராய நகர் வெங்கட் நாராயணா சாலையிலுள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 45 டிகிரி செங்குத்தாக போடப்பட்டுள்ள சாய் (சரிவு) தளம் இது; இதில் தவறுதலாக கால் வைத்த பெரியவர் ஒருவர் இரண்டு வாரங்களுக்கு முன்பு வழுக்கி விழுந்துள்ளார்; மாற்றுத்திறனாளிகளுக்காக உருவாக்கப்பட்டது என்று கணக்கு காண்பிக்கப்படும் இந்தப் பாதையில் யார் கால் வைத்தாலும் சறுக்கி விழுவதைத் தவிர வேறு வழியில்லை.
சென்னை தியாகராய நகர் ரங்கன் தெருவிலுள்ள எச்டிஎஃப்சி வங்கி ஏடிஎம்முக்குச் சென்றால் “இந்த ஏடிஎம்மில் சாய்தளப் பாதை அமைக்க வசதியில்லை; வருந்துகிறோம்” என்ற நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டில் இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பி வைத்த குறிப்பின்படி இது ஒட்டப்பட்டுள்ளது. சாய்தளப் பாதை அமைப்பது நடைமுறை சாத்தியமில்லாமல் போகும்போது இப்படிப்பட்ட அறிவிப்பை எல்லோருக்கும் தெரியும்படி ஒட்டி வைக்க வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்துகிறது.

சாய்தளம் அமைக்கக் கோரும் இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிக்கை
சாய்தளம் அமைக்கக் கோரும் இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிக்கை

மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தும்படி சாய்தளப் பாதையை அமைப்பதில் வங்கிகளுக்கு என்ன கஷ்டம்? வங்கிகளின் நிர்வாகத்தைக் கையாளும் மனிதர்களின் அணுகுமுறையில், சிந்தனைப் போக்கில் பிரச்சினை இருக்கிறது. “மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான வழக்கில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றத்துக்குச் சமீபத்தில் சென்றிருந்தேன்; அங்கு வழக்குரைஞர் ஒருவர் இரண்டு முதல் மூன்று சதவீதமே உள்ள மாற்றுத் திறனாளிகளுக்காக இதைச் செய்ய வேண்டுமா என்று கேட்டார்” என்கிறார் டிசம்பர் 3 இயக்கத்தின் தீபக் நாதன். இந்த மனநிலைதான் தடையற்ற சூழலை உருவாக்குவதற்குத் தடையாக இருக்கிறது. கடைசி மனிதருக்கும் நன்மை கிடைக்க வேண்டும் என்கிற ஜனநாயக சிந்தனை பரவலாகாத வரைக்கும் மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொன்றுக்கும் போராடியாக வேண்டும்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்