பாஜக தலைவர் அமித் ஷா கொல்கத்தாவில் மாயோ சாலையில் நடக்கும் பேரணி ஒன்றில் அவர் சனிக்கிழமை கலந்துகொண்டார். அவரின் வருகையை அடுத்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் அப்பகுதி முழுவதையும் “மேற்கு வங்க விரோத பாஜகவே திரும்பிப் போ” என்று அச்சிடப்பட்ட போஸ்டர்கள், பேனர்களை வைத்திருந்தனர். அஸ்ஸாம் தேசிய குடியுரிமை பதிவேடு விவகாரத்தில் (NRC) ஆளும் பாஜக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இச்சுவரொட்டிகள் எல்லா இடங்களிலும் ஒட்டப்பட்டிருந்தது. மேலும் மாநிலம் தழுவிய போராட்டங்களையும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி நடத்தியது .

அமித் ஷாவின் பேரணிக்கு எதிரான சதி என்று இது குறித்து பாஜக கூறியுள்ளது. முன்னதாக கொல்கத்தாவில் நடக்கும் அமித் ஷாவின் இப்பேரணிக்கு மம்தா பானர்ஜி அனுமதி மறுத்ததாக செய்திகள் வெளியாகின. பின்னர் கொல்கத்தா போலீஸார் இதற்கு அனுமதி வழங்கினர்.

50

ஜூலை முப்பதாம் தேதி வெளியான அஸ்ஸாம் தேசிய குடியுரிமை பட்டியலின் இறுதி வரைவில் 40 லட்சம் மக்களின் பெயர்கள் விடுபட்டதை அடுத்து பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. “சிறுபான்மையினருக்கு எதிரான சதி” என்று மம்தா பானர்ஜி இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

பேரணியில் பங்கேற்று பேசிய பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நாங்கள் வங்க மொழி பேசுபவர்களுக்கு எதிரானவர்கள் அல்ல. மம்தா பானர்ஜிக்கு தான் எங்களுக்கு எதிரி எனக் கூறினார்.

மேற்கு வங்கத்தில் பாஜகவை வலுப்படுத்தும் நோக்கில் அமித் ஷா இப்பேரணியைத் திட்டமிட்டுள்ளார். 2014இல் நடந்த நாடளுமன்றத் தேர்தலில் பாஜக இங்கு இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 2019இல் அதிக தொகுதிகளை வெல்ல வேண்டும் என்று இலக்குடன் பாஜக செயல்பட்டு வருகிறது.

Courtesy : NDTV

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்