வங்கதேச கிரிக்கெட் அணி, வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரை வெஸ்ட்இண்டீஸ் அணி 2-0 என்ற கணக்கில் வென்றது.

இரு அணிகள் மோதிய 3 போட்டிக்கொண்ட ஒருநாள் தொடரில் முதல் ஆட்டத்தில் வங்கதேசமும், 2-வது ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீசும் வெற்றி பெற்றன.

ஒருநாள் போட்டி தொடரை வெல்லப் போகும் அணி எது என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி 7:00 மணிக்கு செயின்ட் கிட்ஸில்(St Kitts) இன்று(சனிக்கிழமை) நடக்கிறது.

வெஸ்ட்இண்டீஸ் அணி விபரம் :

ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), தேவேந்திர பிஷூ, கிறிஸ் கெய்ல், ஷிம்ரோன் ஹெட்மியர், ஷை ஹோப், ஆல்ஜார்ரி ஜோசப், எவின் லீவிஸ், ஜேசன் முகம்மது, ஆஷ்லே நர்ஸ், ரோவ்மன் பவல், ஷெல்டன் கோட்ரெல், கெமி பால், கீரன் பவல்.

வங்கதேச கிரிக்கெட் அணி விபரம் :

மஷ்ரஃப் மோர்டாசா,முகம்மது ஹாசன் மிராஸ், ரூபல் ஹொசைன், முஸ்தாபிஜூர் ரஹ்மான், தமீம் இக்பால், அனாமுல் ஹக், ஷகிப் அல் ஹசன், முஷ்கிக்குர் ரஹிம், மஹ்முதுல்லா, சபிரிர் ரஹ்மான் மற்றும் மொசாட் ஹூசைன்.

இதையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜூலை 31 ம் தேதி தொடங்குகின்றன. ஆகஸ்ட் 4 மற்றும் ஆகஸ்ட் 5 அன்று மற்ற இரண்டு டி20 போட்டிகளும் நடைபெறும்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்