வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் வரும் 25-ம் தேதி புயலாக மாறி கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. நேற்றைய தினம் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவான நிலையில் தற்போது அது ஆழந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் ஒட்டி பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி வரும் 25-ம் தேதி கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுக்கும், மேலும் 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வழுவெடுக்கும். தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நவம்பர் 25-ம் தேதி புயலாக வலுவடைந்து மாமல்லபுரம் – காரைக்கால் இடையே புயல் கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, சென்னைக்கு கிழக்கே 1,000 கி.மீட்டர் தூரத்தில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு நோக்கி நகர்கிறது. 25-ம் தேதி புயல் மாமல்லபுரம்-காரைக்காலை நெருங்குவதால் 75-100 கி.மீட்டர் வேகத்தில் புயல் வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தமிழகத்திற்கு வருகின்ற 25ம் தேதி ரெட் அலர்ட் விடுத்து இந்திய வானிலை மையம், வருகின்ற 25ம் தேதி தீவிர கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here