வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி: சென்னை வானிலை ஆய்வு மையம்

0
422

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து வங்ககடலில் குறைந் காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வடகிழக்கு வங்க கடலில் உருவாகும் இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி 24 மணி நேரத்தில் வலுப்பெறும் என கூறப்பட்டுள்ளது.

இதனிடையே இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கன மழை முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், தேனி திண்டுக்கல் மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொருத்தவரையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று காலை வரை, சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில், இடைவிடாமல் மழை பெய்தது. நேற்று காலை நிலவரப்படி, ஊத்துக்கோட்டை, தாமரைப்பாக்கம், புழல், பூண்டி, 9 செ.மீ., மழை பெய்துள்ளது. அண்ணா பல்கலை, மாம்பலம், பொன்னேரி, சென்னை விமானநிலையம், 8; ஆலந்துார், பெரம்பூர், தரமணி, செம்பரம்பாக்கம், சோழவரம், கும்மிடிப்பூண்டி, 7; நுங்கம்பாக்கம், திருத்தணி, தாம்பரம், 6 செ.மீ. மழை பெய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here