சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா மரணம் குறித்து சிறப்பு விசாரணைக் குழு அமைக்கக்கோரி தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சொராபுதீன் சேக் என்கவுன்டர் தொடர்பான வழக்கை வந்த மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா, மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி மரணமடைந்தார். இந்த வழக்கில், முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட, பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் அமித் ஷா, வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இதையும் படியுங்கள்: உச்சநீதிமன்ற நீதிபதிகளைப் பேச வைத்த லோயா வழக்கு

இந்நிலையில் நீதிபதி லோயாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக ’தி காரவன்’ இதழ் செய்தி வெளியிட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து, நீதிபதி லோயா மரணம் குறித்து வெளிப்படை மற்றும் நேர்மையான முறையில் விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

justices

இந்த மனுவினை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் ஏம்.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கில், கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதி, அனைத்து வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து, உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று (ஏப்.19) சிறப்பு விசாரணைக் கோரிய மனுவினைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதையும் படியுங்கள்: அமித் ஷா வழக்கை விசாரித்த சிபிஐ நீதிபதி லோயா மாரடைப்பால் மரணிக்கவில்லை: தடயவியல் நிபுணர்

இதையும் படியுங்கள்: ஒக்கியால் பாதிக்கப்பட்ட பெண்களிடையே ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும்”