சிபிஐ நீதிமன்ற நீதிபதி லோயா மரணத்திலுள்ள உண்மை வெளிப்படும் என முன்னாள் மத்திய நிதியமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவருமான யஷ்வந்த் சின்கா கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்

டெல்லியில் வெள்ளிக்கிழமை (இன்று) உச்சநீதிமன்ற நீதிபதிகள், செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பி லோகூர், ரஞ்சன் கோகாய் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, கடந்த சில மாதங்களாக உச்ச நீதிமன்றத்தில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெற்று வருவதாகவும், இதே நிலை நீடித்தால் இந்தியாவில் ஜனநாயகம் நிலைக்காது எனவும் தெரிவித்தனர். மேலும் அவர்கள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, மற்ற நீதிபதிகளுக்கு வழக்குகளைப் பிரித்துக் கொடுப்பதில் பாரபட்சம் காட்டுவதாகவும் குற்றம் சாட்டினர்.

இதையும் படியுங்கள்: ஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்

அப்போது நீதிபதி ரஞ்சன் கோகாயிடம் செய்தியாளர்கள் நீதிபதி லோயா மரணம் தொடர்பான வழக்கு குறித்து குறிப்பிடுகிறீர்களா என கேட்டதற்கு ஆவர் ஆமாம் என்றார். நீதிபதி லோயா மரணம் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது.

இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் அதிருப்தி குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவருமான யஷ்வந்த் சின்கா, உச்சநீதிமன்ற நீதிபதிகள் உண்மையை உரக்கக் கூறியுள்ளனர் என்றும், நீதிபதி லோயா மரணத்திலுள்ள உண்மை வெளிப்படும் என தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர், உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஊடகங்களைச் சந்தித்திருப்பது முன்னெப்போதும் இல்லாதது என்றும், இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: “கப்பல் படையில் மீனவர்களைச் சேருங்கள்”