லோயாவின் உடற்கூறு ஆய்வு அறிக்கையில் பல உண்மைகள் மறைக்கப்பட்டதற்கு பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரின் உறவினர் உடந்தையாக இருந்ததாக தி காரவன் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சொராபுதீன் சேக் என்கவுன்டர் தொடர்பான வழக்கை விசாரித்து வந்த மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா, மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி மரணமடைந்தார். இதன் பின்னர், சொராபுதீன் சேக் என்கவுன்டர் வழக்கை விசாரித்த வேறொரு நீதிபதி, வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவை விடுவித்தார்.

இதையும் படியுங்கள்: உச்சநீதிமன்ற நீதிபதிகளைப் பேச வைத்த லோயா வழக்கு

இந்நிலையில் நீதிபதி லோயா மரணத்தில் மர்மம் இருப்பதாக தி காரவன் இதழ் செய்தி வெளியிட்டிருந்தது. இதனையடுத்து நீதிபதி லோயா மரணம் குறித்து வெளிப்படை மற்றும் நேர்மையான முறையில் விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இதையும் படியுங்கள்: நீதிபதி லோயா “படுகொலை”யை மறைக்க மகாராஷ்டிர முதல்வர் முயற்சி

முன்னதாக, நீதிபதி லோயா மாரடைப்பால் மரணிக்கவில்லை என அவரது மரணம் தொடர்பான அறிக்கைகளை ஆய்வு செய்த டெல்லி எய்ம்ஸ் (All India Institute of Medical Sciences) தடவியல் துறையின் முன்னாள் தலைவரான டாக்டர் ஆர்.கே.ஷர்மா கூறியதாக தி காரவன் செய்தி வெளியிட்டிருந்தது. இந்நிலையில், லோயாவின் உடற்கூறு ஆய்வு அறிக்கையில் பல உண்மைகள் மறைக்கப்பட்டதற்கு பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரின் உறவினர் உடந்தையாக இருந்ததாக தி காரவன் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: அமித் ஷா வழக்கை விசாரித்த சிபிஐ நீதிபதி லோயா மாரடைப்பால் மரணிக்கவில்லை: தடயவியல் நிபுணர்

லோயா உடற்கூறு ஆய்வறிக்கை, நாக்பூர் அரசு மருத்துவக்கல்லூரியைச் சேர்ந்த மருத்துவர் என்கே தும்ராம் என்பவர் மேற்பார்வையில் சமர்ப்பிக்கப்பட்டதாக ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆய்வறிக்கை மகராஷ்டிரா மெடிக்கல் கவுன்சிலில் உறுப்பினராகவுள்ள மருத்துவர் மக்கரந்த் வியாவஹரே (Makarand Vyawahare), என்பவரின் வழிகாட்டுதலின்படி பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக தி காரவன் இதழ் கூறியுள்ளது.

இது குறித்து அந்த இதழில் , லோயாவின் உடற்கூறாய்வு நடந்தபோது, அருகே இருந்த இளநிலை மருத்துவர் ஒருவர், லோயாவின் தலை மற்றும் பின்னால் இருந்த காயங்கள் குறித்து கேள்வி எழுப்பியதாகவும், அதனால் மக்கரந்த் வியாவஹரே கோபமடைந்ததகாவும் ஊழியர்கள் தெரிவித்ததாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் மக்கரந்த் வியாவஹரே, “நான் என்ன சொல்கிறேனோ அதை மட்டும் எழுதுங்கள்” என மருத்துவருக்கு உத்தரவிட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கரந்த் வியாவஹரே யார் இவர்? :

மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது அமைச்சரவையில் முக்கியத்துறையான நிதித்துறையின் அமைச்சகராக இருப்பவர் சுதிர் முங்கதிவார்.

maya

இவரின் நெருங்கிய உறவினர்தான் மக்கரந்த் வியாவஹரே. இவரின் வழிகாட்டுதலின்படிதான், லோயா உடற்கூறாய்வு அறிக்கையில் பல உண்மைகள் மறைக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

source: the quint

இதையும் படியுங்கள்: ஒக்கியால் பாதிக்கப்பட்ட பெண்களிடையே ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here