மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பதாக உறுதி செய்யப்படாத தகவல் ஒன்று உலவுகிறது.

மாநகரம் படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் லோகேஷ் கனகராஜ். தற்போது கார்த்தி, நரேன் நடிப்பில் கைதி என்ற படத்தை இயக்கியுள்ளார். நாயகி இல்லாமல் இந்தப் படம் தயாராகியுள்ளது. 

இதையடுத்து விஜய்க்காக கதை தயார் செய்தவர் அதனை விஜய்யிடம்   கூறியதாகவும், அவரும் ஓகே சொன்னதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஒரு படம் வெளியாகும் போதே அடுத்தப் படத்தை அறிவிப்பவர் விஜய். அட்லி படம் தீபாவளிக்கு வெளிவரும் நிலையில், இன்னும் சில வாரங்களில் விஜய் தனது அடுத்தப்பட இயக்குநரை இறுதி செய்வார் என நம்பப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here