பேஸ்புக்கில் பதிவிடப்படும் போஸ்ட்களில் இருந்து விருப்பக் குறி (likes) களின் எண்ணிக்கையை ‌மறைப்பது தொடர்பான சோதனை, ஆஸ்திரேலியாவில் நடத்தியுள்ளது. 

உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள சமூக வலைதளம் பேஸ்புக். இதனைப் பயன்படுத்தாதவர்கள் மிகக் குறைவு என்றே சொல்லலாம். உலகம் முழுவதிலும் பெரும்பான்மையானவர்கள் பேஸ்புக்கைப் பயன்படுத்தி வருகின்றனர். இதில் அவ்வப்போது புதிய அப்டேட்கள் செய்யப்பட்டு வருகின்றன.  இப்போது ’லைக்-ஹைடிங்’ ஆப்ஷன் அறிமுகப்படுத்தப்படுகிறது. பயனர்கள் மத்தியில் நேர்மறையான கருத்துகளை ஏற்படுத்துவதற்காக, இந்த ஆப்ஷனை பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. 

பேஸ்புக் பயனர்கள் பகிரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு அவர்களை பின் தொடர்வோர்கள் மற்றும் பிறபயனர்கள் லைக்ஸ்களை பதிவிடலாம். இது பயனர்கள் மத்தியில் எதிர்மறை எண்ணங்களை விதைப்பதாக தகவல் வெளியானது. இதனால் பேஸ்புக்கில் பதிவிடப்படும் பதிவின் விருப்பக் குறிகளை (likes) யாரும் பார்க்க முடியாத அளவிற்கு “லைக்-ஹைடிங்” என்ற சோதனை முயற்சியில் பேஸ்புக் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.