உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் முழுவதுமாக உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

திரிபுராவில் கடந்த 25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடதுசாரிகளின் ஆட்சியை வீழ்த்தி பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது. இதனையடுத்து, திரிபுராவின் பெலோனியா நகரிலிருந்த லெனின் சிலையை, பாரத் மாதா கீ ஜே என்ற கோஷத்துடன், பாஜகவினர் ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்துத் தள்ளினர். இந்தச் சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதேபோன்று, தமிழகத்திலும் பெரியார் சிலை உடைக்கப்படும் என பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கூறியிருந்தார். இதனையடுத்து செவ்வாய்க்கிழமை (நேற்று) இரவு, வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே இருந்த தந்தை பெரியார் சிலையை பாஜகவினர் சேதப்படுத்தினர். இது தொடர்பாக பாஜக நகரச் செயலாளர் முத்துராமன், பிரான்சிஸ் ஆகியோரைப் போலீசார் கைது செய்தனர்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் காலிகட் பகுதியிலுள்ள, பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் சிலையைச் சிலர் சேதப்படுத்தினர். இந்தச் சம்பவம் தொடர்பாக இடதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த ஆறு பேரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.

ip-2

இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டின் மவானா என்னும் பகுதியிலிருந்த அம்பேத்கர் சிலையை செவ்வாய்க்கிழமை (இரவு) மர்ம நபர்கள் சிலர் உடைத்துள்ளனர்.

up

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனையடுத்து மீண்டும் ஒரு புதிய சிலை நிறுவப்படும் என மாநில அரசு கூறியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இதையும் படியுங்கள்: சிரியா: பட்டினியால் உண்டான போர் இது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here