பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மீதான கால்நடை தீவன ஊழல் வழக்கில், வரும் மார்ச்.15ஆம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது.

இதையும் படியுங்கள்: ஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்

பீகார் மாநில முதல்வராக லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்த காலத்தில் கால்நடைகளுக்காக வாங்கப்பட்ட தீவனத்தில் பல கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ஐந்து வழக்குகள் தொடரப்பட்டன. இதில் மூன்று வழக்குகளில் 2013, 2017 மற்றும் கடந்த ஜனவரியில் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு ராஞ்சியிலுள்ள பிர்ஸா முண்டா சிறையிலுள்ளார்.

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்

இந்நிலையில் 1995ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 1996ஆம் ஆண்டு ஜனவரி வரை தும்கா கருவூலத்தில் 13.13 கோடி ரூபாய் வரை முறைகேடு நடைபெற்றதாக சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கை ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த நான்காவது வழக்கில் மார்ச் 15ஆம் தேதி தீர்ப்பு வழங்கவுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்: ஒக்கி புயல் பேரிடரின் முதல் ஆவணம்

கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான முதல் வழக்கில் கடந்த 2013ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போதே அவர், தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதியை இழந்து விட்டார்.

இதையும் படியுங்கள்: குஜராத் படுகொலை பிரதான நாயகனின் முகமூடியைக் கிழிக்க நெருப்பாற்றில் நீந்தும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியின் போராட்டம்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here