லாரி வேண்டுமென்றே மோதியது; கொலை முயற்சி – உன்னாவ் பெண் பரபரப்பு வாக்குமூலம்

0
308


எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உன்னாவ் பெண்ணுக்கு நினைவு திரும்பிய நிலையில், கார் விபத்துக்குள்ளாகவில்லை, அது திட்டமிட்ட கொலை என்று பரபரப்பு வாக்குமூலத்தை அளித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டம் பங்கர்மாவ் தொகுதியின் பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங்கால்  பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்  சென்ற கார் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. 

ஜூலை 28ம் தேதி உன்னாவ் பெண் வந்த கார் மீது லாரி மோதிய விபத்தில் அவருடன் வந்த இரண்டு பெண்கள் பலியாகினர். உன்னாவ் பெண்ணும் அவரது வழக்கறிஞரும் படுகாயத்துடன் நினைவிழந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தனர். 

இந்த நிலையில், இருவரும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததன் பயனாக, உன்னாவ் பெண்ணுக்கு நினைவு திரும்பிய நிலையில், தங்கள் கார் விபத்தில் சிக்கவில்லை  வேண்டுமென்றே அந்த லாரி மோதியது என்று உடன் இருந்த உறவினர்களிடம் பெண் கூறியுள்ளார்.

அது விபத்தில்லை, வழக்கறிஞர்தான் காரை ஓட்டி வந்தார். காருக்கு வழிவிடாமல் நேராக வந்து லாரி எங்கள் மீது மோதியது, லாரி மீது மோதாமல் தவிர்க்க வழக்கறிஞர் எவ்வளவோ போராடியும் முடியவில்லை என்று கூறியுள்ளார்.

தற்போது 19 வயதாகும் உன்னாவ் பெண், பாஜகவில் இருந்து நீக்ககப்பட்ட எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்த நிலையில், சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், உன்னாவ் பெண் வந்த கார் விபத்துக்குள்ளானதை அடுத்து, செங்கார் மீது கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது 

வழக்கின் பின்னணி

2017, ஜூன் 4 ஆம் தேதி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அன்று பாஜக எம் எல் ஏ குல்தீப் சிங் செங்கரின் உதவியாளர் ஷாஷி சிங் சிறுமிக்கு வேலை வாங்கித் தருவதாக எம் எல் ஏ வீட்டிற்கு கூட்டி வந்திருக்கிறார். எம் எல் ஏவின் மிரட்டலுக்கு பயந்து ஜூன் 4 முதல் ஜூன் 10 ஆம் தேதி வரை சிறுமி தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது பற்றி யாருக்கும் சொல்லாமல் இருந்திருக்கிறார். ஜூன் 11 ஆம் தேதி மீண்டும் எம் எல் ஏவின் ஆட்களால் கடத்தப்பட்டு ஜூன் 19 வரை கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆட்படுத்தபட்டார் 

உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டம் பங்கர்மாவ் தொகுதியின் பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினர் குல்தீப்சிங் என்பவரும், அவரது சகோதரரும், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அப்பகுதியைச் சேர்ந்த சுரேந்திரா சிங்
என்பவரின் மகள், காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். ஆனால் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.


இந்நிலையில், புகார் அளித்த அந்த பெண்ணின் தந்தையை பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங்கின் அடியாட்கள் கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும் ஆயுதம் வைத்திருந்ததாக சுரேந்திரா சிங்கைப் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்ட சுரேந்திரா சிங்கின் உடல்நிலை திடீரென்று மோசம் அடைந்தது. இதனையடுத்து உன்னாவ் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஆறு போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங்கின் சகோதரர் உட்பட நான்கு பேரைப் போலீசார் கைது செய்தனர். இதன் பின்னர் இந்த வழக்கை, அம்மாநில அரசு, சிபிஐ விசாரணைக்கு மாற்றியது. இதனைத்தொடர்ந்து, பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

பாஜக எம் எல் ஏ குல்தீப் சிங் செங்கர் தற்போது சிறையில் இருக்கிறார். இந்நிலையில் பாஜக தலைவர் மற்றும் சிபிஐ அதிகாரி என்றும் கூறிக் கொண்டு இரண்டு பேர் மே 10, வியாழகிழமை குல்தீப் சிங் செங்கருக்கு எதிராக இருக்கும் வழக்கை தள்ளுபடி செய்து தருவோம் என்று குல்தீப் சிங் செங்கரின் மனைவி சங்கீதா சிங்கிடம் 1 கோடி ரூபாய் கேட்டிருக்கிறார்கள் . எம் எல் ஏ குல்தீப் சிங் செங்கரை பாதுகாப்பாக சிறையிலிருந்து வெளியேக் கொண்டு வருவோம் என்று அவர்கள இருவரும் வாக்குறுதி கொடுத்துள்ளனர். அவர்களை கைது செய்திருக்கிறது காவல்துறை .

உத்தரப் பிரதேசத்தில் உன்னாவ் சிறுமியை பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் பாலியல் பலாத்காரம் செய்திருப்பது உறுதி
செய்யப்பட்டுள்ளதாகவும், உத்திரப் பிரதேச போலீசார் குல்தீப் சிங் செங்கரை காப்பாற்ற முயற்சித்தனர் என்பதும் சிபிஐ விசாரணை தெரிவித்திருந்தது .


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here