லாரன்சின் லக்ஷ்மி பாம்… இப்படியா வெடிக்க வேண்டும்?

0
155


காஞ்சனா படத்தை இந்தியில் லக்ஷ்மி பாம் என்ற பெயரில் லாரன்ஸ் இயக்கி வந்தார். அக்ஷய் குமார், கியாரா அத்வானி முக்கிய வேடத்தில் நடித்து வந்தனர். இந்நிலையில், மரியாதை இல்லாத இடத்தில் பணிபுரிய முடியாது என்று படத்திலிருந்து விலகியுள்ளார் லாரன்ஸ்.

காஞ்சனா படம் லாரன்ஸ், ராய் லட்சுமி, கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி நடிப்பில் உருவாகி தமிழ், தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சரத்குமார் இதில் திருநங்கையாக நடித்திருந்தார். காஞ்சனாவின் வெற்றி காரணமாகவே காஞ்சனா 2, 3 படங்கள் எடுக்கப்பட்டன. சமீபத்தில் காஞ்சனா 3 படத்தின் வசூல் (தமிழ், தெலுங்கு இணைந்து) 100 கோடிகளை கடந்தது.

காஞ்சனா படத்தை இந்தியில் லாரன்ஸ் சில வாரங்கள் முன்பு தொடங்கினார். அக்ஷய் குமார், கியாரா அத்வானி நடித்தனர். இந்நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. 2020 ஜுன் 5 ஆம் தேதி படம் வெளியாகும் என்று அக்ஷய் அறிவித்தார்.

படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் வெளியீட்டு தேதியை லாரன்சின் கவனத்துக்கு செல்லாமலே தன்னிச்சையாக அறிவித்துள்ளனர். இயக்குநருக்கு தெரியாமல் அவரது படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் வெளியீட்டு தேதியை அறிவித்ததால், மரியாதை இல்லாத இடத்தில் வேலை செய்ய முடியாது என படத்திலிருந்து விலகுவதாக லாரன்ஸ் அறிவித்தார். மேலும், பர்ஸ்ட் லுக்கில் தனக்கு திருப்தி இல்லை என அதிருப்தியை வெளியிட்டுள்ளார். 

அக்ஷய் குமார் மீது தனிப்பட்ட முறையில் மரியாதை வைத்திருப்பதால் அவரை சந்தித்து ஸ்கிரிப்டை தரவிருப்பதாகவும், வேறு இயக்குநரை வைத்து படத்தை எடுப்பதில் தனக்கு ஆட்சேபணை இல்லை எனவும் லாரன்ஸ் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here