2013 இல் உத்தர்காண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கை மையப்படுத்தி இந்தியில் எடுக்கப்பட்டிருக்கும் படம் கேதார்நாத். கேதார்நாத் சிவன் கோவில் இந்த வெள்ளத்தில் மூழ்கியது நினைவிருக்கலாம். இந்தப் படம் லவ் ஜிகாத்தை மையப்படுத்தியது என்று சொல்லி பாஜக, காங்கிரஸ் இரு கட்சிகளிலும் உள்ள இந்துமத அடிப்படைவாதிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்து ஆண், முஸ்லீம் பெண்ணை காதலிப்பதை, திருமணம் செய்வதை இந்துமத அடிப்படைவாதிகள் எதிர்ப்பதில்லை. ஒருவகையில் அதனை ஊக்குவிக்கவே செய்கிறார்கள். அது அப்படியே உல்டாவாகி, முஸ்லீம் இளைஞனுக்கு இந்து பெண் மீது காதல் ஏற்பட்டால், கல்யாணம் செய்து கொண்டால், அது லவ் ஜிகாத். காதல் தீவிரவாதம். இரண்டு பேர் மனம் பொருந்தி காதலித்தாலும், கல்யாணம் செய்தாலும் இவர்களுக்கு அது திட்டமிட்ட தீவிரவாதம், லவ் ஜிகாத்.

கேதார்நாத் படத்தில் வரும் நாயகன் முஸ்லீம், நாயகி இந்து என்ற அடிப்படையில் கேதார்நாத் படத்தை மத அடிப்படைவாதிகள் எதிர்க்கின்றனர். நாயகனும், நாயகியும் முத்தமிட்டுக் கொள்கிறார்கள், இது இந்துமத புனிதத்துக்கு எதிரானது என்று காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளையும் சேர்ந்த மத அடிப்படைவாதிகள் ஒரே குரலில் கூறியிருக்கிறார்கள்.

இந்த எதிர்ப்பே கேதார்நாத் படத்துக்கு விளம்பரமாக அமைந்து நூறு கோடியை படம் தாண்டட்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here